மேஷம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். தந்தை வழியில் ஆதாயம் கிடைப்பதுடன் செலவுகளும் ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு வீட்டில் மராமத்துப் பணியின் காரணமாக உடல் அசதி உண்டாகும் . உறவினர்களுடன் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கி சுமுகமான உறவு ஏற்படும். நண்பர்களால் உதவி உண்டு. துர்கையை வழிபட எதிலும் வெற்றியே ஏற்படும்.
ரிஷபம்: காரியங்கள் அனுகூலமாகும். சகோதரர்கள் கேட்கும் உதவியைச் செய்வீர் கள். மாலையில் உறவினர்களுடன் தொடர்பு கொண்டு பேசி நலம் விசாரிப்பீர்கள். உடல் ஆரோக் கியம் மேம்படும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற் பட்டு நீங்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சிவபெருமானை வழிபட விருப்பங்கள் நிறைவேறும்.
மிதுனம்: திடீர் செலவுகள் ஏற்படும். போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். மற்றவர் களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும். மீனாட்சி அம்மனை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
கடகம்: மனதில் இனம் தெரியாத சோர்வு ஆட்கொள்ளும். வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும். உடல்நலனில் கவனம் தேவை. உங்கள் தேவையை அறிந்து மற்றவர்கள் உதவி செய்வது ஆறுதலாக இருக்கும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும் பொறுமை மிக அவசியம். மகாவிஷ்ணுவை வழிபட, சிரமங்கள் குறையும்.
சிம்மம்: தாய்வழி உறவில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள் ளைகளால் பெருமை உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். இன்று முருகப்பெருமானை வழிபட அதிக நன்மைகளைப் பெறலாம்.
கன்னி: தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு திடீர் பணவரவுக்கும், திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. பேச்சினால் பிரச்னை வர வாய்ப்பு உள்ளதால் மற்றவர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்வது நல்லது. மகாலட்சுமியை வழிபடுவதன் மூலம் பிரச்னைகள் நீங்கும்.
துலாம்: புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண் டாகும். பிள்ளை அல்லது பெண்ணின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிலருக்குக் குடும்பம் தொடர்பான வேலையை முன்னிட்டு சற்று அலைச்சல் ஏற்பட லாம். மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்படும். லட்சுமி நரசிம்மரை வழிபட எதிலும் வெற்றியே கிடைக்கும்.
விருச்சிகம்: இன்று எதிலும் பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால் சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வாழ்க்கைத்துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அலைச்சல் உண்டாகும். சகோதரர்களால் அனுகூலம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும். பிரத்தியங்கிரா தேவையை வழிபட பிரச்னைகள் நீங்கி மன அமைதி உண்டாகும்.
தனுசு: மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. ஆனாலும் செலவுகள் அதிகரிப்பதால் சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். நண்பர்கள் பணஉதவி கேட்டு வருவார்கள். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு இளைய சகோதரர்கள் மூலம் எதிர்பாராத ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு. ஆஞ்சநேயரை வழிபட நினைத்தவை நிறைவேறும்.
மகரம்: முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. எதிரிகளால் ஏற்பட்ட இடையூறு கள் விலகும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார் கள். தட்சிணாமூர்த்தியை தியானிப்பதன் மூலம் நற்பலன்கள் அதிகரிக்கும்.
கும்பம்: புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். நண்பர்கள் தொடர்பு கொண்டு மகிழ்ச்சியான செய் தியை பகிர்ந்துகொள்வர். எதிரிகள் வகையில் எச்சரிக்கையாக இருக்கவும். சிலருக்கு வீண் அப வாதம் ஏற்படக்கூடும். மாலையில் சோர்வு நீங்கி உற்சாகம் பெறுவீர்கள். அம்பிகை வழிபாடு அனுகூலமான பலன்களைத் தரும்.
மீனம்: மகிழ்ச்சியான நாள். ஆனால், தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். சிலருக்கு வாழ்க்கைத்துணையுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடவும். நண்பர் களுக்காக செலவு செய்யவேண்டி வரும். பிள்ளைகள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். மகாவிஷ்ணு வழிபாடு நலம் சேர்க்கும்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.