நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் இம்முறை சிவராத்திரி தின விசேட வழிபாடுகள் எந்தப் பதற்றமும் இல்லாமல் மிகவும் அமைதியாக இடம்பெற்றன.
மலை உச்சியில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரருக்கு நேற்று பிற்பகல் விசேட அபிசேகபூஜைகள் இடம்பெற்றன. ஏனைய பரிவார தெய்வங்களுக்கும் விசேட ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டிருந்தது.
இம்முறை ஆலயத்தில் மாலை 6 மணிவரை மாத்திரமே பூஜைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் மாலை 6 மணிவரை ஆலயத்தில் விசேடவழிபாடுகளை மேற்கொண்ட பொதுமக்கள் அதன்பின்னர் தமது வீடுகளுக்குத் திரும்பினார்கள்.
இதேவேளை நேற்றுக் காலைமுதல் ஆலய பகுதியில் நெடுங்கேணி பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இருப்பினும் பொதுமக்களின் வழிபாடுகளுக்கு எந்தத் தடைகளும் பொலிஸாரால் ஏற்படுத்தப்படவில்லை.
கடந்த வருடம் சிவாரத்திரி தினமன்று மாலை 6 மணிக்கு பின்னர் சிவராத்திரி பூஜைகளை முன்னெடுக்க முற்பட்ட 8 பேர் நெடுங்கேணி பொலிஸாரால் அடாவடியான முறையில் கைதுசெய்யப்பட்டனர். அந்த செயற்பாடு மதப்பதற்றம் ஒன்றை உருவாக்கியிருந்ததுடன், பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.