திரைப்பட இயக்குநரும் பிரபல எழுத்தாளருமான ஜெயபாரதி நுரையீரல் தொற்று காரணமாக இன்று காலை உயிரிழந்துள்ளார்.
1979 ஆம் ஆண்டு குடிசை எனும் திரைப்படத்தை தயாரித்து சினிமா உலகில் பிரபலமடைந்தார்.
மேலும் நண்பா நண்பா, ஊமை ஜனங்கள், ரெண்டும் ரெண்டும் அஞ்சு, உச்சி வெயில் ஆகிய திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு புத்திரன் எனும் திரைப்படத்தை இயக்கியதற்காக தமிழக அரசின் மூன்று விருதுகளையும் பெற்றார்.
நுரையீரல் தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி அவரது 77 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
திரைத்துறையினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.