இயற்கையான முறையில் உங்கள் சருமம் சிவப்பழகுடன் இருக்க வேண்டுமா?
பொதுவாக நம்மில் பலருக்கும் இருக்கும் ஆசை, சருமம் பளபளப்பாக கருவளையம், முகப்பரு எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான். இயற்கையான மற்றும் உடலிற்கு தீங்கு விளைவிக்காத பொருட்களை வைத்து எவ்வாறு சிவப்பழகுடைய சருமத்தை பெற முடியும் என்பதை தற்போது பார்க்கலாம்.
1. தினமும் இரண்டு வேலை முகத்தை கழுவுவது:
நீங்கள் உங்களது தினசரி நாட்களில் காலை மற்றும் மாலை முகத்தை கழுவுவீர்கள். ஆனால் உங்களுக்கு வியர்வை அளிக்கும் எந்த வேலையானாலும் அதனை முடித்து விட்டு கட்டாயமாக முகத்தை கழுவ வேண்டும். ஏனென்றால் வியர்வை முகத்தில் உள்ள போர்ஸ்களை அடைத்து பிம்பிள் மற்றும் பிற சருமப் பிரச்சனைகளை உண்டாக்கும்.
2. சத்தான இயற்கை உணவுகள்:
தற்போது மக்கள் அதிகம் விரும்பி எடுத்துக்கொள்ளும் உணவு பாஸ்ட் புட் (fast food) தான். இதனால் எந்த வித நன்மைகளும் இல்லை. எனவே இந்த உணவுகளை நிறுத்தி விட்டு நல்ல இயற்கை உணவுகள் மற்றும் பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள். அது உங்கள் சருமத்தை நன்கு பொலிவடையச் செய்யும்.
3. தண்ணீர் நிறைய குடிப்பது:
ஒரு நாளைக்கு சராசரியாக 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால் இந்த காலகட்டத்தில் மற்ற வேலை மும்மரத்தில் தண்ணீர் அதிகம் யாரும் குடிப்பதில்லை. இது உங்கள் உடலின் நீர் அளவை குறைத்து சருமத்தை வறட்சியாக்கி விடும். எனவே இனிமேல் தண்ணீர் அதிகம் குடித்து உடல் மற்றும் சருமப் பிரச்சனைகளில் இருந்து உங்களை காத்துக்கொள்ளுங்கள்.
4. நல்ல தூக்கம்:
சராசரி மனிதன் தினமும் 8 மணிநேரம் அவசியம் தூங்க வேண்டும். ஆனால் இப்பொழுது தூக்க நேரத்திலும் செல் போனை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இதனால் காலையில் எழும்போது உங்கள் உடல் மற்றும் முகம் மிகவும் சோர்வாக இருக்கும். இந்த பழக்கத்தை மாற்றி கொள்வது மிகவும் முக்கியமாகும்.
5. மாய்ஸ்சரைஸ்:
தினமும் முகம் முதல் பாதம் வரை மாய்ஸ்சரைஸ் செய்ய வேண்டும். அதற்கும் எந்த ஒரு கெமிக்கல் பொருட்களும் தேவை இல்லை. தேங்காய் எண்ணெய் மட்டும் போதும், இது உங்கள் உடலின் சூட்டை தனித்து குளிர்ச்சியான உணர்வை அளிக்கும்.
6. வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை- கடலை மாவு மற்றும் றோஸ்வோட்டரை நன்கு கலந்து முகத்தில் பூசி 5 நிமிடங்கள் ஊற வைத்து கழுவ வேண்டும். இது சருமத்தை வெண்மையாக சிவப்பழகாக மற்ற உதவும்.
இந்த முறைகளை தொடர்ந்து பின்பற்றி வந்தால் கண்டிப்பாக நீங்கள் எதிர்பார்த்த முகப்பரு இல்லாத சிவப்பழகு உள்ள சருமத்தை பெற முடியும்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.