புதியவன்
ஏற்றுமதியை இலக்காகக் கொண்டு, முருதவெல ருவாவ கிராமத்திற்கு அருகாமையில் இரண்டாவது செவ்விளநீர் பயிர்ச்செய்கை கிராமம் நிறுவப்பட்டுள்ளது.
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் நேற்று (25) இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
ஏற்றுமதிக்கு செவ்விளநீர் பயிரிடும் முதல் கிராமம் கடந்த ஆண்டு முருதவெலவில் தொடங்கப்பட்ட நிலையில், இவ்விரு கிராமங்களிலும் 10 ஆயிரம் செவ்விளநீர் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.
ஐக்கிய அரபு இராச்சியம் உட்பட பல நாடுகளில் எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் செவ்விளநீருக்கு அதிக கிராக்கி இருப்பதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
வாரத்திற்கு சுமார் 2 இலட்சத்து 52 ஆயிரம் செவ்விளநீர்கள் நாட்டிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றனமையும் 2022 ஆம் ஆண்டில் செவ்விளநீர் ஏற்றுமதி மூலம் இரண்டு பில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அதன்படி, ருவாவ கிராமத்தில் இரண்டாவது செவ்விளநீர் பயிர்ச்செய்கை மாதிரி கிராமத்தின் பயிர்ச்செய்கைக்காக ஆயிரத்து 600 செவ்விளநீர் நாற்றுகளை நேற்று விவசாயிகளுக்கு அமைச்சர் வழங்கினார்.
இந்நிகழ்வில் தென்னைச் செய்கை சபையின் தலைவர் திருமதி மாதவி ஹேரத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.