இராஜதந்திரமா... மரணப்பொறியா...
இராஜதந்திரமா... மரணப்பொறியா...

இலங்கையில் கடந்த ஒரு வாரத்துக்குள் அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் போர்க் கப்பல்கள் நங்கூரமிட்டிருக்கின்றன. இதன் உச்சக் கூட்டமாக, இந்திய போர்க்கப்பல் இலங்கையில் நங்கூரமிட்டிருக்கும் சமநேரத்தில், சீனத்தின் மூன்று போர்க் கப்பல்களை நேற்று வரவேற்றிருக்கின்றது கொழும்பு, எரிபொருள் மீள்நிரப்பல். மாலுமிகளுக்கான ஓய்வு மற்றும் இருதரப்பு நட்புறவு என்று பல காரணங்களை இந்தக் கப்பல்களின் அணிவகுப்பின் பின்னால் அடுக்கிக்கொண்டு சென்றாலும், இவற்றுக்கு அப்பாற்பட்டு இராஜதந்திர நெருக்கடிகளும் இதில் செல்வாக்குச் செலுத்து கின்றன என்றால், அதில் இரண்டாம் கருத்தில்லை.

ஜென்மத்துப் பகையாளிகளை ஒரேபந்தியில் அமரவைத்து உணவுபரிமாறி நலம் விசாரித்து வழியனுப்பி வைப்பதென்பது ஒரு கலை. அந்தக் கலை அனைவருக்கும் வாய்க்காது. உண்மையில் இது உச்சக்கட்ட இராஜதந்திரமும்கூட இந்த இராஜ தந்திரத்தைத்தான் மிக நேர்த்தியாகவும் இலாவகமா சுவும் அண்மைய நாள்களாகச் செயற்படுத்திக் கொண்டிருக்கின்றது கொழும்பு. உலகின் ஆகப் பெரும் வல்லாதிக்கச் சக்திகளை, 'ஒரு மாலை நேரத்துத் தேநீர்போல்' அவ்வனவு இலாவகமாகவும், மிகமிகச் சாதூரியமாகவும் கொழும்பு கையாண்ட பாங்கு. அதன் துறைமுகங்களில் இந்தவாரம் வலுவாகவே பட்டவர்த்தனமாகி இருக்கின்றது.

ஆனால், டைட்டானிக்கை மூழ்கடித்த பனிப்பாறை போன்று, கொழும்பின் இந்த இராஜதந்திரங்களுக்குப் பின்னால் ஆழமான ஆபத்துகள் ஒளிந்திருப்பதையும் மறுப்பதற்கில்லை. ஏனெனில் இன்று உலகளாவிய போர்களில் கடற்பதற்றங்களும் பிரதான காரணமாகவே உள்ளன கடற்பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் கடந்த பத்து ஆண்டுகளில் சீனா காட்டும் வளர்ச்சி மிகப்பெரியது. அமெரிக்காவால் கூட சீனத்தின் இந்த வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை இதனால்தான் சீனாவுடன் முரண்பட்டுக் கொள்ளும் நாடுகளின் கடற்படைகளுக்கு தாராளப் பிரபுவாக ஆயுதங்களை வாரி இறைத்துக் கொண்ருக்கின்றது அமெரிக்கா. இப்போதும்கூட அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டனுக்குச் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், இந்தியக் கடற்படைக்குத் தேவையான அதிநவீன ஆயுதங்களை விற்பதற்கு இணக்கியிருக்கின்றது அமெரிக்கா இவ்வாறானதொரு பின்னணியில் எரிதணல் நிலையில் இலங்கைத் துறைமுகங்களை வல்லரசுகளால் இலகுவாகக் கையாளக்கூடிய ஏதுநிலைகளை ஏற்படுத்துவதானது, மரணப் பொறியை நோக்கி நடைபோடும் காரியமாகவும் அமைந்துவிடும். சிங்கப்பூகும் தன் துறைமுகங்களில் தாராளக் கொள்கையைக் கடைப்பிடிக்கவே செய்கின்றது. ஆனால், வல்லாதிக்கச் சக்திகளுக்குள் அகப்பட்டு அமிழ்ந்துபோகும் நிலையில் சிங்கப்பூர் இன்றில்லை. அவ்வாறான நிலையை சிங்கப்பூர் கடந்து கனகாலம். அதன் பொருளாதாரமோ இன்று மிகப்பெரியது. ஆனால், இலங்கையின் இன்றைய நிலையோ மிகப் பரிதாபசுரமானது. இராஜதந்திர விளையாட்டுகளுக்கு முன்னர், தான் வைத்திருக்கும் கடன்கள் மற்றும் நம்பியிருக்கும் பெருஉதவிகள் தொடர்பில் கொழும்பு சிந்திக்கவேண்டியது மிக அவசரமும் அவசியமுமாகும்.

#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking

#editorial

371 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.