இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டுடியோ க்ரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் “கங்குவா”திரைப்படம் உலகம் முழுவதும் நவம்பர் 14 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாவதற்கு நாளை மட்டுமே உள்ள நிலையில், பெரிய சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது.
ஆம், அர்ஜுன் லால் என்பவரிடம் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் கடனாக பெற்ற வழக்கில் ரூ.20 கோடியை வரும் 13ம் திகதிக்குள் உயர்நீதிமன்ற சொத்தாட்சியரிடம் செலுத்தாமல் கங்குவா படத்தை வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திரைத்துறையில் பலருக்கு கடன் கொடுத்திருக்கிறார் அர்ஜுன் லால். ஆனால், நிதி இழப்பு ஏற்படதன் காரணமாக, அவர் திவாலானதாக அறிவிக்கப்பட்டார். பின்னர் அவர் உயிரிழந்ந்துவிடவும் அவரது சொத்துகளை உயர் நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் நிர்வகித்து, கடன் வாங்கியவர்களிடம் வசூலிக்க நடவடிக்கை எடுத்துவருகிறார்.
இந்நிலையில், திவாலானவராக அறிவிக்கப்பட்ட மறைந்த அர்ஜுன் லால் என்பவரிடம் ஸ்டூடியோ கிரீன் பெற்ற கடனை வசூலிப்பது தொடர்பாக, கூறியபடி பணத்தை செலுத்தவில்லை என சொத்தாட்சியர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா ஆஜரானார்.
தற்போது வழக்கு விசாரணையில், அர்ஜுன் லாலுக்கு செலுத்த வேண்டிய ரூ.20 கோடியை வரும் நாளை 13ம் திகதிக்குள் உயர் நீதிமன்ற சொத்தாட்சியருக்கு செலுத்தாமல் கங்குவா படத்தை வெளியிடக் கூடாது என ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.