நாட்டைவிட்டு வெளியேறும் பெருமளவான மருத்துவர்கள்
நாட்டைவிட்டு வெளியேறும் பெருமளவான மருத்துவர்கள்

எச்சரிக்கும் மருத்துவர் சங்கம்

(புதியவன்)

இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் பெரும் எண்ணிக்கையிலான மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறப்போவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் உள்ள மருத்துவர்களில், 25 சதவீதமானோர் ஏற்கனவே வெளிநாட்டில் வேலை தேடுவதற்கான முனைப்புக்களை மேற்கொண்டுள்ளனர் என்று அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில் கொவிட் தொற்றைத் தொடர்ந்து சராசரியாக 200 மருத்துவர்கள்வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்ததாகவும் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சுகாதாரத் துறையில் தற்போது பணியாற்றிவரும் 20ஆயிரம் மருத்துவர்களில் ஏறக்குறைய ஐயாயிரம் மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான முடிவை எடுக்கக் காத்திருப்பதாகவும் விஜேசிங்க கூறியுள்ளார்.

வெளியேறுபவர்களில் முக்கியமாக அவசரகால மருத்துவம் மற்றும் குழந்தை மருத்துவர்கள், மனநல மருத்துவர்கள், நரம்பியல் நிபுணர்கள் மற்றும் இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் அதிகளவில் உள்ளடங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். (ஏ)

123 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.