சர்வதேச டெஸ்ட் போட்டியில் நான்காவது இன்னிங்ஸில், வேகமான மற்றும் சிறந்த துடுப்பாட்ட சராசரி மதிப்பில் சதம் அடித்த நான்காவது வீரராக இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் பத்தும் நிஸ்ஸங்க இடம்பிடித்துள்ளார்.
அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ஜஸ்டின் லாங்கரை பின்னுக்கு தள்ளி பத்தும் நிஸ்ஸங்க நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.
'தி ஓவல்' மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்தது.
இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில், பத்தும் நிஸ்ஸங்க சிறப்பான துடுப்பாட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் ஆட்டமிழக்காது 127 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் 102.41 சராசரியுடன் இந்த ஒட்டத்தை குவித்திருந்தார்.
123 பந்துகளை எதிர்கொண்ட அவர், 13 நான்கு ஓட்டங்கள் மற்றும் இரண்டு ஆறு ஓட்டங்கள் அடங்களாக இந்த ஓட்டத்தை குவித்திருந்தார்.
மேலும், பத்தும் நிஸ்ஸங்க டெஸ்ட் போட்டியொன்றில் பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்டமாகவும் இது பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர் அவர் 103 ஓட்டங்களை டெஸ்ட் போட்டியில் அதிகப்பட்சமாக பெற்றிருந்தார்.
கடந்த 2022ஆம் ஆண்டு நாட்டிங்ஹாமில் நியூசிலாந்துக்கு எதிராக போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜோனி பேர்ஸ்டோவ் 136 ஓட்டங்களை 147.82 என்ற சராசரியில் குவித்து முதலிடத்தில் உள்ளார்.
அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் 118.82 சராசரியுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதுடன், நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் 115.55 சராசரியுடன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.