இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் நிறைவில் இலங்கை அணிக்கு வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளது.
இலங்கை அணியின் சிறந்த பந்துவீச்சு மூலமாக இங்கிலாந்து அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டம் கட்டுப்படுத்தப்பட்டதன் மூலமே இந்த வாய்ப்பு உருவானது. அத்தோடு பத்தும் நிஸ்ஸங்க சிறந்த ஆரம்பம் ஒன்றை அதிரடியாக துடுப்பாட்டத்தில் வழங்கியுள்ளார்.
219 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கோடு துடுப்பாடி வரும் இலங்கை அணி இன்றைய நாள் நிறைவில் 15 ஓவர்களை எதிர்கொண்டு 01 விக்கெட்டை இழந்து 94 ஓட்டங்களை பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணி இரண்டாம் இன்னிங்ஸில் 33.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 156 ஓட்டங்களை பெற்றது. இதன் மூலம் இலங்கை அணிக்கு 219 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் லஹிரு குமார 4 விக்கெட்களையும், விஸ்வ பெர்னாண்டோ 3 விக்கெட்களையும், அசித்த பெர்னாண்டோ 2 விக்கெட்களையும், மிலான் ரத்நாயக்க ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.
இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸில் 61.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்தது 263 ஓட்டங்களை பெற்றது. இன்றைய மூன்றாம் நாள் ஆரம்பிக்கும் போது பலமாக இலங்கை அணி காணப்பட்ட போதும், மேலதிக ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 62 ஓட்டங்களினால் முன்னிலை பெற்ற நிலையில் தமது துடுப்பாட்டத்தை ஆரம்பித்தனர். இன்றைய நாளில் இதுவரை 16 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டுள்ளன.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்தது 325 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் ஒல்லி பொப் 154 ஓட்டங்களை 156 பந்துகளில் பெற்றுக்கொண்டார். அதன் மூலமே இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது. பென் டக்கெட் 86 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இலங்கை அணியின் பந்துவீச்சில் மிலான் ரத்நாயக்க 3 விக்கெட்களையும், விஸ்வ பெர்னாண்டோ, லஹிரு குமார, தனஞ்ஜய டி சில்வா ஆகியோர் தலா இவ்விரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள். (ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.