முல்லைத்தீவு மருத்துவமனை தெரிவிப்பு
முல்லைத்தீவு வற்றாப்பளைப் பகுதியைச் சேர்ந்த இளம் தாயொருவர் உயிரிழந்தமை தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை நிர்வாகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என்று மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் நளின் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையின் அசமந்தப்போக்காலேயே உயிரிழப்பு நிகழ்ந்ததாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் அதற்குப் பதிலளிக்கும் வகையில், மருத்துவமனை நிர்வாகம் மற்றும் நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் ஊடக சந்திப்பை நடத்தி இதனைத் தெரிவித்தனர். வற்றாப்பளையைச் சேர்ந்த இளம் தாயொருவர் அண்மையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அவரின் இறப்புக்கு குறித்து மருத்துவ அறிக்கையில், நோயாளியை மருத்துவமனைக்குக் கொண்டுவர காலதாமதமே காரணமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விசாரணை முடிவில் தவறுகள் இழைக்கப்பட்டிருப்பின் தகுந்த சட்ட நடடிக்கை எடுக்கப்படும் - என்றார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.