இளம் தொழில் முனைவோர்களுக்கான SPARK போட்டிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
இளம் தொழில் முனைவோர்களுக்கான SPARK போட்டிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

இளம் தொழில்முனைவோர்களுக்கான "SPARK - 2024 " போட்டியை இலங்கை வர்த்தக சம்மேளனம் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இது நாடுமுழுவதும் உள்ள இளம் தொழில்முனைவோர் தங்கள் புதுமையான வணிக யோசனைகளை முன்வைத்து, செப்டம்பரில் நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் பாரிய வெற்றியைப் பெறுவதற்கான களத்தை அமைத்துள்ளது.

சமூக சவால்களுக்கு மத்தியில் புதுமையான தீர்வுகளை வழங்குவதற்கான திறன்கள் மற்றும் வளங்களை  முன்வைத்து 15-30 வயதுடைய இளையோர்களை இலக்கு வைத்து 2023 ஆம் ஆண்டு SPARK தொடக்கப்பதிப்பின் வெற்றியைக் கட்டியெழுப்பியதன் ஊடாக SPARK - 2024 நாட்டின் இளைஞர்களிடையே தொழில்முனைவோர் உணர்வைத் தொடர்ந்து வளர்த்து வருகிறது. இளம் தொழில்முனைவோர்களிடமிருந்து  2023 ஆம் ஆண்டு இலங்கை முழுவதிலுமிருந்து 400க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன.   

போட்டியில் பங்கேற்பவர்களுக்கு நிபுணத்துவ வழிகாட்டுதல், அறிவுரை மற்றும் வளங்களை அணுகுதல் தொடர்பிலும் பட்டறைகள் மற்றும் தொடக்க முகாம்கள் மூலம் அவர்களின் தொழில்முனைவோர் திறன்களை மேம்படுத்த உதவுகிறது. திட்டமிடப்பட்ட மாபெரும் போட்டியானது எதிர்வரும் செப்டம்பரில் முடிவடைகிறது.   

பங்கேற்பாளர்கள் தங்கள் புதுமையான வணிக யோசனைகளைத் தேர்ந்தெடுத்து, விருதுகள், மற்றும் சர்வதேச வெளிப்பாட்டுக்கான வாய்ப்புகள் உள்ளிட்ட சிறப்பான பரிசுகளுக்காக தம்மை தயார்படுத்திக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

SPARK - 2024 ஆனது சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் தொழில்முனைவோர் சூழல் அமைப்பு பங்காளிகளால் ஆதரிக்கப்படுகிறது.

SPARK - 2024க்கான விண்ணப்பங்கள் ஜூலை 15, 2024 வரை பெற்றுக்கொள்ளப்படும். ஆர்வமுள்ள பங்கேற்பாளர்கள் தங்கள் நுழைவு விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் மேலதிக தகவல்களுக்கு https://spark.chamber.lk/ என்ற இணைதள முகவரியை அணுக முடியும்.    (ஏ)

1666 1

1 Comments

MARIYARAJ JENEED 29-Jun-2024

எனது சுயதொழிலாக அலையாத்தி நண்டு உற்பத்தி வியாபார திட்டம்.

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.