சீனாவின் ஷுஹாய் நகரில் உள்ள மைதானம் ஒன்றின் முன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த மக்கள் மீது கார் ஒன்று அதிவேகமாக மோதியதில் அங்கிருந்த ஏராளமானோர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 43 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பெரியவர்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
62 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபரின் விவாகரத்தின் பின்னர் ஏற்பட்ட சொத்து தீர்வின் போது ஏற்பட்ட பிரச்சினை தொடர்பான மன அழுத்தம் காரணமாகவே இந்த நபர் இவ்வாறு செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் தற்போது கோமா நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதனால் அவரிடம் மேற்கொள்ள முடியவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.