தேநீர்இ கொத்து ரொட்டிஇ முட்டை ரொட்டி மற்றும் மதிய உணவு பொதியின் விலைகளை உடனடியாகக் குறைக்க வேண்டும் என நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
எரிபொருள் விலை திருத்தத்தின் பின்னர் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் குறைக்கப்பட வேண்டும். இதன்படி ஒரு கப் தேநீரின் விலை 10 ரூபாவாலும்இ கொத்து ரொட்டி மற்றும் முட்டை ரொட்டியின் விலை 20 ரூபாவாலும் குறைக்கப்படவேண்டும்.அத்துடன்இ மதிய உணவு பொதியின் விலையையும் உடனடியாகக் குறைக்க வேண்டும்.
அரசாங்கத்தின் விலை சூத்திரத்திற்கு அமைய ஒரு லீட்டர் டீசல் மற்றும் பெட்ரோலின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இக்குறைப்பு நுகர்வோருக்கு பயனளிக்கும் வகையில் அமைய வேண்டும்இ எனவே அனைத்து வர்த்தகர்களும் விலைகளை குறைத்து இந்த சேமிப்பை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். (ஞ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.