பாதுக்க பிரதேசத்தில் தனியார் நிறுவனமொன்றின் 43 ஊழியர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (4) காலை 43 ஊழியர்கள் உணவு ஒவ்வாமையினால் ஹோமாகம ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
உணவு ஒவ்வாமைக்கு உள்ளானவர்களில் 20 – 40 வயதுக்கு இடைப்பட்ட 25 பெண்களும் 18 ஆண்களும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.
இந்த ஊழியர்களுக்கு நிறுவனத்தில் உள்ள சிற்றுண்டிச்சாலையிலிருந்து காலை உணவு வழங்கப்பட்டதன் பின்னர் அவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (ஞ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.