உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் நிதிக் குற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்வரும் பொதுத்தேர்தலிற்கு முன்னதாக அரசாங்கம் மூன்று உயர்மட்ட குழுக்களை நியமிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒழுக்காற்று அடிப்படையிலான ஆட்சி ஊழல் வீண்விரயம் போன்றவற்றிற்கு தீர்வை காணுதல் போன்ற ஜனாதிபதியின் தேர்தல்கால வாக்குறுதிகளை அடிப்படையாக கொண்டு இந்த குழுக்களை அரசாங்கம் நியமிக்கவுள்ளதாக அரசாங்க வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.
உள்நாட்டு பொறிமுறை மூலமே பொறுப்புக்கூறலிற்கு தீர்வு காணப்படும் என தெரிவித்துள்ள அந்த வட்டாரங்கள் இன்னமும் தீர்வு காணப்படாமல் உள்ள பொறுப்புக்கூறல் சம்பவங்களின் எண்ணிக்கையை அறிவதற்கான நடவடிக்கைகளை விசாரணை அதிகாரிகள் துரிதப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளன.
இதேவேளை ஊழல், களவாடப்பட்ட சொத்துக்கள் மற்றும் இழக்கப்பட்ட பொதுமக்களின் வரிப்பணத்தை மீட்பதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கான குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் புதிய கோணத்தில் ஆராய்வதற்கான குழுவொன்று நியமிக்கப்படவிருப்பதாகவும், இதற்காக விசேட குழுவை தெரிவு செய்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களிற்கு நிச்சயம் நீதி வழங்கப்படும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.