பிலிப்பைன்ஸ் நாட்டில் உலகின் மிகப்பெரிய கோழி வடிவ ஓட்டல் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
காம்புஸ்டோஹான் ஹைலேண்ட் ரிசார்ட்டின் ஒரு பகுதியாக கட்டப்பட்டுள்ள இந்த கோழி வடிவ ஓட்டல் 34.931 மீட்டர் (114 அடி 7 அங்குலம்) உயரமும் 12.127 மீட்டர் (39 அடி 9 அங்குலம் ) அகலமும் 28.172 மீட்டர் (92 அடி 5 அங்குலம்) நீளமும் கொண்டது.
இந்த ஓட்டலில் 15 அறைகள் உள்ளன.
2023 ஜூன் 10 ஆம் தேதி தொடங்கப்பட்டு 2024 செப்டம்பர் 8 ஆம் திகதி கட்டி முடிக்கப்பட்ட இந்த ஓட்டல் உலக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.
கடுமையான புயல் மற்றும் சூறாவளியை தாங்கும் வகையில் இந்த ஓட்டல் வடிவமைக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.