உலக பட்டினி நாள் இன்று
உலக பட்டினி நாள் இன்று


உலகில் உளள்ள அனைவருமே வேலை வேலை என்று ஓடி ஓடி பணத்தை சேர்ப்பதெல்லாம் ஒரு சாண் வயிற்றின் பசியை போக்கத்தான். இருந்தாலும் தினசரி ஒருவேளை உணவுக்கு போராடுபவர்களும் பிளள்ளைகளின் பசியை போக்க தன் உணவை குறைத்துக் கொள்ளும் தந்தையர்களும், தண்ணீரை குடித்து பசியை தணித்துக்கொள்ளும் அம்மாக்களும், ஒருவேளை உணவுக்காக பிறரிடம் கையேந்தி யாசகம் கேட்பவர்களும் உலகில் எராளம். பசி என்ற ஒன்று மட்டும் இல்லை என்றால் இங்கு பணத்துக்கு என்ன வேலை இருந்துவிடப் போகிறது? வசதிபடைத்த புத்தியற்ற பசி அறியாத மனிதர்களுக்கு எங்கு தெரிந்துவிடப் போகிறது பசியின் உக்கிரம்? உணவில் பாதியை உண்டுவிட்டு மீதியை குப்பைத்தொட்டியில் போட்டு கடந்து செல்பவர்கள் தங்களைச்சுற்றி பசியோடு கையேந்தி நிற்பவர்களின் முகங்களை ஒருமுறை உற்றுப்பார்த்தால் பசி எவ்வளவு கொடுமையானது என புரிந்து கொள்வார்.

இன்றும் உலகின் பல நாடுகளில் ஒருவேளை உணவு மட்டும் உண்பவர்களும் தண்ணீரைக் குடித்து பசியை போக்குபவர்களும் உள்ளனர். அதைவிடக் கொடுமை நீண்ட நாட்கள் உணவு ஏதும் கிடைக்காமல் மண்ணை அள்ளி உண்ணும் எத்தனையோ பாவப்பட்ட மக்களும் இன்னமும் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். என்றாவது ஒருநாள் இந்த நிலை மாறி பசிமறந்து இருப்போம் என்ற நம்பிக்கையில்.

தங்களின் பசியைப் போக்கிக் கொள்ளள முடியாமல் உலகில் பல மில்லியன் மக்கள் பட்டினியால் ஆண்டுதோறும் இறக்கின்றனர். அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டியது மனித உரிமையாக கருதப்படுகிறது. வசதி வாய்ப்பற்றவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், இயற்கை சீரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்க வேண்டியது அரசின் கடமை என ஐ. நா. சபை வலியுறுத்துகிறது.  இருந்தபோதிலும் வறிய நாடுகள் முதல் வளர்ச்சியடைந்த நாடுகள்வரை மக்கள் பசித்திருப்பதும் பட்டினிச்சாவுகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

உண்மையில் பட்டினி என்பது உடலுக்கு ஆற்றல் வழங்கும் உணவு கிடைக்காமல் பசித்திருப்பதாகும். குறிப்பாக தொடர்ந்து பல நாட்களுக்கு அல்லது மாதங்களுக்கு இவ்வாறு இருப்பதைக் குறிக்கிறது. தொடர்ந்து ஒருவர் பட்டினி இருந்தால் அவரது உடல் உள்ளுறுப்புகள் நிரந்தரமாக செயலிழந்து சாக நேரிடும். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 5 வயதுக்குட்பட்ட 71 இலட்சம் குழந்தைகள் ஆண்டு தோறும் உயிரிழக்கின்றனர். என்றும் ஆசியா, மேற்குஆசியா, ஆப்ரிக்கா ஆகிய கண்டங்களில் வாழும் மக்கள் அதிக அளவில் பட்டினிச்சாவை எதிர்கொள்கின்றனர், என்றும் ஐ.நா. தனது அறிக்கையில் குறிப்பிட்டுளள்ளது.  

உலகில் 81 கோடி மக்கள் இன்னும் பட்டினியுடன் வாழ்கின்றனர். 79.1 கோடி மக்கள் அதாவது 98 சதவீதம் வளர்ந்துவரும் நாடுகளில் உள்ளனர். உலகில் 8  பேரில் ஒருவர் பசியோடு ஒருவேளை உணவுக்கு கையேந்தி வாழ்கிறார். ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் 52 கோடி மக்கள், ஆப்பிரிக்காவில் 3 கோடி மக்கள்,  லத்தீன் அமெரிக்கா  மற்றும் கரீபியன் நாடுகளில் 4 கோடி மக்கள், வளர்ச்சியடைந்த நாடுகளில் 1.5 கோடி மக்கள் பட்டினியில் வாழ்கிறார்கள். கடந்த 20 ஆண்டுகளில் 66 சதவீதம் பட்டினி  அதிகரித்துள்ளதாக உலக பட்டினி குறியீட்டெண் பட்டியல் தெரிவிக்கிறது.

இவ்வாறு பெரும்பாலான மக்கள் பட்டினியால் அல்லல் படுவதை உலகில் உள்ள ஒவ்வொரு தனிமனிதனும் உணர்ந்து கொள்ள வேண்டும். பட்டினியால் வாடும் மக்களை அரசாங்கம் பாதுகாக்க விழிப்போடு செயற்பட வேண்டும். முதலாம் உலகப் போருக்குப் பிறகே ஐக்கிய நாடுகள் சபை பசிக்கு எதிரான போராட்டத்தை வழிநடத்தியது.  உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும், ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றை உலக நாடுகள் சரிசெய்ய வலியுறுத்தியும்  ஒவ்வொரு வருடமும் மே 28 அன்று உலகப் பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது. 

உலக பட்டினி என்பது காலத்தின் தொடக்கத்தில் இருந்தே நிலவும் பிரச்சினையாக இருந்து வருகிறது. உலகம் தோன்றிய காலத்தில் இருந்து, ஏராளமான மக்கள் பசியால் பாதிக்கப்பட்டு உள்ளனர். உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் அடிப்படைத் தேவைகளை வழங்க உலக பட்டினி விரைவில் தீர்க்கப்பட வேண்டும். உலகிலுள்ள பலரின் அமைதியான போராட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படுகிறது.

மக்கள் உணவின்றி தவிப்பதற்கு போர்இ உள்நாட்டு நெருக்கடி, பருவநிலை மாற்றம்இ இயற்கை பேரிடர், பெருந்தொற்று, உணவு பங்கீட்டில் குறைபாடு, சுரண்டல் போன்றவை முக்கிய காரணமாக இருக்கின்றன. போரும், சுரண்டலும், உணவுப் பங்கீட்டில் குறைபாடும் மனிதர்களால் ஏற்படக்கூடியது. 1943 - 1944  ஆண்டுகளில் உலக மக்களின் கவனத்தைப் பெற்ற "பெங்கால்" வறட்சியில் இலட்சக்கணக்கான மக்கள் இறந்தனர். இதற்கு உணவுப் பற்றாக்குறையைக் காட்டிலும் முறையான உணவுப் பங்கீடு இல்லாததுதான் காரணம் என்று பொருளாதார வல்லுநர் அமர்த்தியா ஷென் தெரிவித்திருந்தார். 

'தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்' என்றார் பாரதி.  அவரின் கூற்று உண்மையாக வேண்டும் என்றால் உலகில் பட்டினி இல்லாமல் போகவேண்டும். அதற்கு அனைத்து நாடுகளின் அரசுகளும் விழிப்போடு கருமமாற்ற வேண்டும். அரசு மட்டுமன்றி ஒவ்வொரு தனிமனிதனும் அதற்கு ஒத்துழைப்போடு செயலாற்ற வேண்டும். உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் பசிக்கும் போது உணவும் தாகத்துக்கு தண்ணியும் தாமதமின்றி எப்போது கிடைக்கிறதோ அன்றுதான் உலகில் இந்த பட்டினி ஒழியும் என்பதில் ஐயமில்லை. இன்றையதினம் உலக பட்டினி நாள் என்பதால் ஒவ்வொருவரும் உங்களால் முடிந்தால் பசியின் பிடியில் சிக்கித் தவிப்போர்க்கு ஒருவேளை உணவேனும் வழங்குங்கள். "வாய் வாழ்த்தாவிட்டாலும் வயிறு வாழ்த்தும்" என்று முன்னோர்கள் சொல்லுவார்கள் அதுபோல் நீங்கள் கொடுக்கும் ஒரு வேளை உணவால் உங்களுக்கும் உங்கள் சந்ததிக்கும் இறைவனின் ஆசிகள் கிடைக்கும்.

602 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.