2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் ஊதியம் குறைந்தது 24 வீதத்தால் அதிகரிக் கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. போதாததற்கு வாழ்க்கைச் செலவுப் படியாக மாதாந்தம் 25 ஆயிரம் ரூபா வீதம் மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்றும், ஓய்வூதியர்களுக்கு மாதாந்தம் 12 ஆயிரம்ரூபாவழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக் கின்றது. அரச ஊழியர்களின் ஊதியத்தை அதிகரிப்பது தொடர்பான அறிவிப்புகள் உண்மையில் வரவேற்கப்பட வேண்டியவையே. ஆனால், இந்த அறிவிப்புகள் உண்மை யில் ஆத்மார்த்தமானவைதானா? சாத்தியமானவையா? என்ற கேள்விகளும் எழாமலில்லை.
இரண்டு வருடங்களுக்கு முன்னர், நாடு மிகப்பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் வீழ்ந்தது. ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ச ராஜபக்ச முய முன்னெடுத்த தவறான பொருளாதாரத் திட்டங்களும், அவரால் நடைமுறைப் படுத்தப்பட்ட பொருத்தமற்ற வரிக்கொள்கைகளுமே நாட்டின் பொருளாதார நெருக்கடிகளுக்குப் பிரதான காரணமாகின. இதன் விளைவாக ஏற்பட்ட மக்கள் கொந்தளிப்பால் அவர் ஆட்சியைக் கைவிட்டோடினார். ஆனால், கோத்தாபய ராஜபக்ச மீதும், இந்த நாட்டின் பொருளாதாரத்தை, வளத்தை, பணத்தை சுரண்டி வேட்டையாடிய ஊழல் பெருச்சாளிகள் மீதும் விழவேண்டிய பழிச் சொற்களையும், கல்லெறிகளையும் வாங்கிக்குவித்ததென்னமோ அப்பாவி அரச அலுவலர்கள் தான்.
நாட்டுக்கு அரச அலுவலர்கள் சுமையாக இருக்கின் றனர். நாட்டின் மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் பல்லாயிரம் அரச அலுவலர்கள் மேல்மிச்சமாக இருக்கின் றனர். கூடுதல் அரச ஊழியர்களால் கூடுதலான சுமைகள் நாட்டு மக்கள் மீது ஏற்றப்பட்டிருக்கின்றன என்று தீண்டத் தகாதவர்களாகவும், 'வேண்டத் தகாதவர்களா கவும்தான் அரச ஊழியர்கள் நடத்தப்பட்டனர். இந்த வசைச்சொற்களில் கணிசமானவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்தும் அவர் தரப்பினரிடம் இருந்துமே வந்து பாய்ந்தன. அரசியல் இலாபங்களுக்காக நீங்கள் அளவுக்கதிகமான நியமனங்களை வழங்கிவிட்டு பின்னர் அரச அலுவலர்களை நொந்து கொள்வதில் என்னதான் பயன்? ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தரப்பினர் அன்று காட்டிய முகத்துக்கும், செங்கம்பளம் விரிக்காத குறையாக இன்று வெளிப்படுத்தியிருக்கும் அதீத அக்கறைமிகு அறிவிப்புகளுக்கும் இடையிலான இடைவெளி மிகப்பெரியது. ஆதலால்தான் இந்த அறிவிப்புகள் அனைத்தும் ஆத்மார்த்தமானவையா? அல்லது தேர்தல் பின்னணியைக் கொண்டவையா? என்று எண்ணவேண்டியிருக்கின்றது.
2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இப்பேர்ப் பட்ட சலுகைகளை வழங்கமுடிகின்றது என்றால், இந்தக் குறுகிய காலத்துக்குள் இந்தத் திட்டத்தைச் சாத்தி யப்படுத்தக்கூடிய நிதிமூலம் எங்கிருந்து கிடைக்கப் பெறும்? என்ற தெளிவுபடுத்தலை அரசாங்கம் வழங்க வேண்டும். அதிலும் அரச ஊழியர்களுக்கு மாதாந்தம் 25 ஆயிரம் ரூபா வீதம் மூன்று வருடங்களுக்கும், ஓய்வூதி யர்களுக்கு மாதாந்தம் 12 ஆயிரம் ரூபா வீதமும் வழங்குவதற் கான பணத்தின் நிதிமூலம் என்ன? என்பதை வெளிப்ப டுத்த வேண்டியது மிகமிக முக்கியமானது. இவ்வளவு பெரிய தொகைகளை வாரி இறைக்கக்கூடிய வகையில் இலங்கை, தன் உள்நாட்டு வர்த்தகச் சுழற்சியை இன்னமும் பெருக்கியதாகவில்லை. பணத்தை அச்சிடுவதற்கு சர்வதேச நாணய நிதியம் ஏகப்பட்ட நிபந்தனைகளை விதித்திருக்கின்றது. ஆக, அரச ஊழியர் களின் ஊதியங்களை அதிகரிப்பதற்காக அப்பாவி மக்கள் மீது கூடுதல் வரிகள் விதிக்கப்படவுள்ளதா? என்ற சந்தேகம் பலமாக எழவே செய்கின்றது.
தேர்தல் காலம் என்றாலே, இலங்கையில் தேனும் பாலும் ஓடுகின்ற வாக்குறுதிக் காலம்தான். மறுகேள்வி கேட்காமல்புள்ளடிகளைப் போட்டுப்பழக்கப்பட்டதால் தான் எம் நாட்டைத் தூக்கி நிறுத்த இந்தியாவும், நாணய நிதியமும் இன்று தேவைப்படுகின்றது. எப்படி...? எங்கிருந்து...? எவ்வாறாக...? எதற்காக...? என அவ்வப் போது கேட்டுவிடல் அனைத்திலும் ஆரோக்கியமே!
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.