ஏன்... எதற்காக...
ஏன்... எதற்காக...

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் தமிழாகக்கட்சிக்குள் கடத்த சில வாரங்களாகவே இடியப்பச் சிக்கல்நிலை நீடித்து வந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பது என்று தீர்மானித்திருக்கின்றது தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு தமிழர் தரப்பு பொதுவேட்பாளரையே தமிழரசுக் கட்சி ஆதரிக்கவேண்டும் எனக் கட்சியின் கிளிநொச்சி மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் கட்டமைப்புகள் தீர்மானங்களை நிறைவேற்றி, மேலிடங்களுக்கு வலியுறுத்தியிருந்த நிலையிலேயே, அந்த அழுத்தங்களுக்கு அப்பாற்பட்டு, ஐக் இயமக்கள் சக்தி ஐக்கியமக்கள் கூட்டணியின் பெரும்பான்மை யின வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது என்று தீர்மானித்திருக்கின்றது மத்திய செயற்குழு.

தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பது என்று நீர்மானித்தமையொன்றும் அவ்வளவு பெரிய ஆச்சரியத்துக் சூரிய விடயம் அல்ல ஏனெனில், போர் முடிவடைந்த மறு வருடமே பொன்சேகாவுக்கு வாக்களித்தவர்கள் தமிழர்கள். மைத்திரிக்காக அன்னம் விடு தூதுகளை அமுல்படுத்தியதும் நாங்களே, இவ்வளவு என், இதே சஜித் பிரேமதாலவை கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போதும் தமிழர் தாயகம் வலுவாக ஆதரித்திருந்தது ஆனால் இவ்வருடத்தின் ஜனாதிபதித் தேர்தல் வித்தியாசமானது. கடந்த தேர்தல்களில் இலங்கையின் அதியுச்ச அதிகாரத்தைத் தேர்ந்தெடுப்பதே தமிழர்கள் முன்பாக இருந்த ஒரே தெரிவாக இருந்தது. ஆனால், இம்முறை, 'தமிழர்களின் அபிலாஷைகள் திறை வேற்றப்படவில்லை ஆதலால், சிங்களத் தலைவர்களுக்கான கூட்டான எதிர்ப்பு' என்ற தோரணைப்பட 'தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டுள்ளார். அதையெல்லாம் தாண்டித்தான் சஜித்தை ஆதரிக்கும் முடிவை அறிவித் திருக்கின்றது தமிழரசு.

ஆனால், சஜித்தை ஆதரிப்பதற்கு தமிழரசு மேற்கொண்ட பயணமும், செயற்படுத்திய விட்டுக்கொடுப்புகளும் அடிக் கோடுகள் காட்டப்படுவதற்கு ஏற்றவையே. ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது? என்பதற்காக தமிழாகதன் மத்திய குழுக்கூட்டத்தை முதன்முதலில் கூட்டியபோது. ஒஸ்லோ உடன்படிக்கையை எவர் ஏற்கின்றனரோஅவருக்கே ஆதரவு என்று அறிவித்திருந்தது. பின்னர் அந்த வலியுறுத்தல் சுயாட்சியாகக் குறைந்தது. பின்னா 13ஆவது திருத்தத்தை முற்றாக நடைமுறைப்படுத்துவேன் என்று தெரிவித்த சஜித்துக்கு ஆதரவு வழங்கியிருக்கின்றது அப்படியென்றால் இந்தத் திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம்?

சில வேளைகளில், தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு அப்பாற்பட்ட புரிந்துணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு இந்த ஆதரவு அறிவிக்கப்பட்டிருக்கலாம் அவ்வாறான புரிந்துணர்வுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தால் அதுகுறித்த பிடிமானங்களை எழுத்துமூலமாக தமிழரசு உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அவற்றை பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தினால். தமிழரசு சஜித்தை எதற்காக ஆதரிக்கின்றது? என்ற குழப்பங்களில் இருந்து மக்களுக்கு விடிவுகிட்டும். அத்துடன், பொது வேட்பாளர் விடயத்தை முன்னிறுத்தும் தரப்புகள் குறைந்தபட்சம் இரண்டாம் பட்சத் தெரிவாகவேனும் சஜித்தை முன்னிலைப்படுத்தக்கூடும் எல்லாவற்றுக்கும் மேல், தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டுள்ள நிலையில் அதுவும் தமிழரசுக் கட்சியைச் சார்ந்தலரே பொதுவேட்பாளராகச் செயற்பட்டுக்கொண்டிருக்கும் பின்னணியில் அதையெல்லாம் தாண்டி சஜித்தை ஆதரித்த தீர்மானத்துக் கான காரணத்தை, ஏன்? எதற்காக? என்ற கேள்விகளின் பாற்பட்டு சஜீத்துக்குஉரிமரசு மிகத்துல்லியமாக புரியவைக்க வேண்டும். ஏனெனில், இந்த ஆதரவுக்காக தமிழாக தம் போது தன்னையேஅடமானம் வைத்திருக்கின்றது.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்கையில், தமிழ்ப் பொது வேட்பாளரைக் களமிறக்கியிருக்கும் நாப்புகளிடமும், தமிழரசுக் கட்சியிடமும் கேட்கவேண்டிய இரு கேள்விகள் இருக்கின்றன. தமிழர்களுக்குத் தம்மைத்தாமே ஆள்கின்ற அதிகாரம் வழங்கப்படவேண்டும் என பல தசாப்தங்களாக வலியுறுத்திவந்த இலங்கையின் ஆகச்சிறந்த இடதுசாரித் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழர் தாயகத்தில் அரசியல் அநாதை யாக்கப்பட்டாரே அது ஏன்.? தமிழர்களுக்கு சுயாட்சிக்கும் மேற்பட்ட அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்தும் நுவான் போபகே, சிறிதுங்க ஜயசூரிய போன்ற சிங்களத் தலைவர்கள் இம்முறையும் தேர்தலில் போட்டியிடு கின்றனர். எனில், எதற்காக அவர்களை முன்னிலைப்படுத்தவில்லை...?

#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking

#editorial

233 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.