முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தின் முன்பாக இன்று காலை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எமது பாடசாலையின் வளர்ச்சியை சீர்குலைத்து பாடசாலை சொத்துக்களை மோசடி செய்யும் அதிபரை எமது பாடசாலையில் இருந்து வெளியேற்றக் கோரி பாடசாலை அபிவிருத்தி சங்கம் ,பழைய மாணவர் சங்கம் ,பெற்றோர் , பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் இணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் வருகை தந்து பெற்றுக்கொண்டு உரிய தரப்பினர்களுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உடய அதிகாரிகளுக்கான மனுவினை தேசிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் வருகை தந்து பெற்றுக் கொண்டார்.
இதேவேஎளை, குறித்த விடயம் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் வலயக்கல்வி அலுவலகம் முன்பாக அல்லது மாகாண கல்வித் திணைக்களம் முன்பாக தாங்கள் பாரிய போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்திருந்தனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.