போக்குவரத்து பொலிஸாரால் விதிக்கப்படும் அபராதங்களை ஒன்லைனில் செலுத்துவது தொடர்பான பயிற்சி செயலமர்வு வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.
இதில் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த போக்குவரத்துப் பொலிஸார் கலந்து கொண்டனர்.
போக்குவரத்து சாரதிகளின செயற்பாடுகளை இலகுபடுத்தும் முகமாக போக்குவரத்து பொலிஸாரால் விதிக்கப்படும் அபாரதங்களை அவ் விடத்திலேயே ஒன்லைன் மூலம் செலுத்தும் நடைமுறை நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது. அதனடிப்படையில், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் இதனை நடைமுறைப்படுததும் வகையில் போக்குவரத்து பொலிஸாருக்கு தெளிவூட்டல் செயலமர்வு இடம்பெற்றது.
இதில் வவுனியா- மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க கப்பு கொட்டுவ, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சோமரட்ன விஜயமுனி மற்றும் பொலிஸ் அதிகாரிகள், போக்குவரத்து பொலிசார் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.