ஜனாதிபதித் தேர்தலுக்கான பரப்புரை நாள் தோறும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. என்று யில்லாதவாறு இதுவரை 18 பேர் ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தைச் செலுத்தியிருக்கின்றனர். வேட்பாளர்களின் எண்ணிக்ககையால் வாக்குச்சீட்டின் நீளம் அதிகரிக்கின்றது என்றும், அதனால் 200 மில்லியன் ரூபாவரையில் மேலதிக செல்ல ஏற்படும் எனவும் தலையிலடித்துக் கொண்டிருக்கின்றது தேர்தல்கள் ஆணைக்குழு, ஜனாதிபதித் தேர்தலின் பிரதான வேட்பாளர்கள் தங்கள் பரப்புரைகளை இப்போதே ஆரம்பித்துவிட்டனர். வடக்கு கிழக்கு உட்பட நாட் டின் அனைத்து இடங்களிலும் அவர்களின் கலரோட்டிகள் தென்பட ஆரம்பித்திருக்கின்றன. நாடு முழுவதும் புயல்வேகத்தில் பரப்புரைக் கூட்டங்களும் ஒழுங்கமைக்கப்பட்டு வருகின்றன. தெற்கு தேர்தல் பரப்புரையில் பரபரத்துக் கொண்டிருக்க, வடக்கு கிழக்கு வழக்கம் போன்று தூங்கு மூஞ்சித்தனமாகவே இருக்கின்றது.
ஜனாதிபதித் தேர்தல் பேச்சு அடிபடத் தொடங்கியதுமே இம்முறை தமிழ் மக்கள் சார்பாக பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்று பேச்சு கிளம்பியது கடந்த காலங்களில் தெற்கு அரசியல் தலைமைகள் தமிழ் மக்கள் தலையில் மிளகாய் அரைக்கும் போக்குக்குப்பதிலடி கொடுப்பதற்கு தமிழ் பொதுவேட்பாளர் விடயம் ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றும் நோக்கப்பட்டது. காலங்காலமாக தேர்தல் காலங்களில் தமிழ்மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி விசிறிவிட்டு, தோதல் முடிந்ததும் தமிழ் மக்களுக்கு போக்குக் காட்டிவிட்டுச் செல்லும் தெற்கு அரசியல் தலைமைகளை இம்முறையும் நம்பி ஏமாறாது அவர்களுக்கும் சர்வதேசத்துக்கும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை ஓங்கி அறைந்துசொல்ல 'தமிழ்ப் பொதுவேட்பாளர்" என்ற ஆயுதத்தைப்பயன்படுத்தும் சந்தர்ப்பம் தமிழ் தரப்புக்குக் கிடைத்திருக்கின்றது. ஆனால் திசைக் கொன்றாக நிற்கும் தமிழ் அரசியல் தரப்புகள் இம் முறையும் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தாமல் பயன்படுத்தத் தெரியாமல் சொதப்பிவிடும் என்ற அச்சம் இப்போது மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலைமையில், பல மாதங்களாக பேச்சுகளில் ஈடுபட்டுவரும் தமிழ்த்தரப்புகள் இன்னமும் 'தமிழ்ப் பொது வேட்பாளர் யார்? என்பதைத் தீர்மானிக்க முடியாது திணறி வருகின்றன. தமிழ்ப் பொது வேட்பாளர் யார் என்பதை இன்று அறிவிப்போம், நாளை அறிவிப்போம்" என்று அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கின்றன.
'தமிழப் பொது வேட்பாளர் என்பது தமிழ் அரசியல் தரப்புகள் நினைப்பது போன்று இலேசான இலகுவான விடயமல்ல 'தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற கருத்தியலை மக்கள் மனங்களில் விதைப்பதற்கு கொண்டு செல்வதற்கு கால அவகாசம் தேவை கை காட்டும் நபருக்கு வாக்கிட்டுச் செல்லும் அளவுக்கு, தமிழ் மக்கள் இப்போது தமிழ்சியல் கட்சிகள் மீது அபிமானத்தோடு இல்லை. 'தமிழ்ப்பொது வேட்பாளர் என்பதில் உள்ள சாதகங்களை அவர்களுக்குள் விதைத் தால் மட்டுமே தமிழ் மக்களின் ஒட்டுமொத்த வாக்குகளையும் ஒரு புள்ளியில் குவிக்கமுடியும் ஆனால், தமிழ்ப்பொதுவேட்பாளர் என்ற கருத்துருவாக்கத்தைச் செயற்படுத்துவோர் இவற்றைக் கவனத்தில் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. தமிழ் பொதுவேட்பாளச் ஒப்புக்குச் சப்பாணியாக எடுத்த காவடியை ஆடி முடிக்கவேண்டும் என்பதற்காக பொது வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டால் அது தமிழ் மக்களுக்கு பாதகளிளைவுகளையே ஏற்படுத்தும். இனியாவது தூங்குமூஞ்சித்தனமாகச் செயற்படாமல் கள நிலைவரத்தை உணர்ந்து தமிழ் தரப்புகள் வேசுரோடுக்கவேண்டும்.
Muchas gracias. ?Como puedo iniciar sesion?
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.