(இன்று ஒரு தகவல்)
பொதுவாக சிலருக்கு காலையில் எழுந்தவுடன் ஒரு கப் தண்ணீர் குடிப்பது வழக்கம்.
அந்த பழக்கத்தை மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர். ஏனெனின் இரவு முழுவதும் வயிற்றிலுள்ள அனைத்து உணவுகளும் சமிபாடடைந்து வெறும் வயிற்றில் இருக்கும் பொழுது தண்ணீர் குடித்தால் வயிற்றிலுள்ள அனைத்து கழிவுகளும் மலம் வழியாக வெளியேறும். இது மலச்சிக்கல் பிரச்சினையும் தடுக்கின்றது.
வெறும் தண்ணீர் குடிப்பதை தவிர்த்து ஏதாவது மூலிகை தண்ணீர் ஒரு கப் குடிக்கலாம். இது வயிற்றை சுத்தப்படுத்துவதுடன் ஆரோக்கியத்தை கட்டியெழுப்பும்.
அந்த வகையில் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய பானங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
செரிமானத்தை விரைவுப்படுத்தும் வேலையை ஜீரா அல்லது சீரக விதைகள் செய்கின்றன.
இந்த தண்ணீரை குடிப்பதால் செரிமான நொதிகளின் சுரப்பிகள் துாண்டப்படுகின்றன.
இதனால் வயிற்றில் வரும் பிரச்சினைகள் வராமல் தடுக்கப்படுகின்றது. ஆகவே காலை எழுந்தவுடன் ஒரு கப் ஜீரா தண்ணீர் குடித்தால் உடல் மந்தம் அடையாமல் வேலை செய்யும்.
அஜ்வெய்ன் என அழைக்கப்படும் ஓம விதைகள் இரைப்பைக்குடல் வலியை நீக்கும்.
இதில் ஒரு வகையான தைமால் இருக்கின்றது. இது செரிமானத்திற்கு தேவையான எண்ணெயை வழங்குகின்றது.
அமிலத்தன்மை நீக்கி எடை இழப்பிற்கு வழிவகுக்கும். டயட் பிளானில் இருப்பவர்கள் இந்த தண்ணீரை தினமும் ஒரு கப் காலை எழுந்தவுடன் குடிக்கலாம்.
அரை டீஸ்பூன் அஜ்வெய்ன் விதைகள் எடுத்து ஒரு கப் தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்கவும்.
சூடு ஆறியதும் வடிகட்டி குடிக்கலாம்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.