கச்சத்தீவு விவகாரம் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் பிரேரணை ஒன்றை முன்வைத்தால் அது தொடர்பில் விவாதிக்க தயார் என அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறுதெரிவித்தார்.
இலங்கையிடம் இருந்து கச்சத் தீவை மீட்க வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான மீனவப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டுமாயின் கச்சத்தீவு இந்தியாவினால் கையகப்படுத்தப்பட வேண்டும் என அந்தப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான கட்சி இந்த தீர்மானத்தை செயற்குழுவில் ஏகமனதாக நிறைவேற்றியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்திய மத்திய அரசுக்கு அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவைப் பேச்சாளர், இந்திய அரசியல் கட்சியொன்று இந்தப் பிரேரணையை நிறைவேற்றியுள்ள போதிலும், இந்திய மத்திய அரசாங்கம் இது தொடர்பில் இலங்கைக்கு எந்தவொரு யோசனையையும் சமர்ப்பிக்கவில்லை. எனினும், இந்திய மத்திய அரசு அப்படி ஒரு பிரேரணையை முன்வைத்தால், அது குறித்து விவாதிக்கத் தயார் - என்றார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.