மன்னார் நானாட்டான் பிரதேசசெயலர் பிரிவுக்குட்பட்ட வங்காலைப் பகுதியில் ஏற்பட்டுள்ள கடலரிப்புக் காரணமாக, வங்காலைக் கிராமமே காணாமற் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மன்னார் மாவட்ட அபிவிருத் திக் குழுக்கூட்டம் நேற்று இடம்பெற்றது. அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மேலும் தெரிவித்ததாவது:-
மன்னார் வங்காலைப் பகுதியில் கடல ரிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின் றது. கடல்நீர் நகருக்குள் உட்புகுவதால் வங்காலையின் இருப்பு கேள்விக்கு உட்பட்டுள்ளது. வங்காலையில் ஒரு தடுப்பணையை அமைக்குமாறு அந்தப் பகுதி மக்கள் நீண்ட நாள்களாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப் பாக வங்காலை - முத்தரிப்புத்துறை அழிவின் விளிம்பில் உள்ளது. அந்தப் பகுதி மக்களும் பெரும் ஆபத்தை எதிர் கொண்டுள்ளனர். ஆனால், முத்தரிப்புத்துறை கடற்படை முகாமுக்கு அருகில் தடுப்பணையொன்று அமைத் துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு யார் நிதியொதுக்கீடு செய்தது? கடற்படையி னரைப் பாதுகாக்க தடுப்பணை அமைக்க முடியுமென்றால், மக்களைப் பாதுகாக்க அமைக்க முடியாதா? - என்றார்.
இதையடுத்து மாவட்டச் செயலர் க.கன கேஸ்வரன் இது தொடர்பில் தெரிவித்ததாவது:-
வங்காலையில் தடுப்பணை அமைப்ப தற்கு 56 மில்லியன் ரூபா தேவைப்படு கின்றது.ஆனால், எமக்கு 23 மில்லி யன் ரூபா மாத்திரமே ஒதுக்கப்பட்டுள் 5 ளது. அதேவேளை முத்தரிப்புத்துறை ய யில் கடற்படையினர் தடுப்பணை அமைப்பதற்கு எம்மால் நிதி ஒதுக்கீடுகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை -என்றார்.
ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் முடிவ டைந்த பின்னர், நாடாளுமன்ற உறுப்பி னர் ரவிகரனின் கோரிக்கைக்கு இணங்க, நாடாளுமன்ற உறுப்பினர் கள், மாவட்டச் செயலர், திணைக்களங் களின் உயர் அதிகாரிகள் ஆகியோர் வங்காலைக்குச் சென்று அங்குள்ள நிலவரங்களைப் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.