(மாதவன்)
கனரக வாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
சாவகச்சேரி ஆதார மருத்துவமனைக்கு அருகாமையில் ஏ - 9 வீதியில் இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கனரக வாகனத்தை பின்நோக்கி திருப்பும்போது அதன் பின்னால் வந்த முச்சக்கரவண்டி அதனுடன் மோதுண்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் அதில் பயணித்த மூவரும் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். (அ-க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.