நாகை - இலங்கையின் காங்கேசன்துறை இடையே கடல் சீற்றம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கப்பல் சேவை நேற்று மீண்டும் ஆரம்பமானதாகதெரிவிக்கப்பட்டுள்ளன.
நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு கடந்த 2023 ஒக்டோபர் முதல் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. சுபம் என்ற தனியாா் நிறுவனம் மூலம் ‘சிவகங்கை’ பயணிகள் கப்பல் சனிக்கிழமைகளை தவிர ஏனைய நாள்களில் இயக்கப்பட்டு வருகிறது.
பருவநிலை மாற்றம் காரணமாக கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவது வழக்கம். அந்தவகையில், கடல் சீற்றம் மற்றும் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை அடுத்து ஜூன் 13ஆம் திகதி முதல் கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை திரும்பப் பெற்றது. இதையடுத்து, காங்கேசன்துறைக்கு கப்பல் சேவை நேற்று காலை வழக்கம் போல் இயக்கப்படும் எனவும்
சிவகங்கை கப்பல் 95 பயணிகளுடன் புறப்பட்டு காங்கேசன்துறைக்கு சென்றடைந்து பின்னர் இலங்கையிலிருந்து 108 பயணிகளுடன் பிற்பகல் புறப்பட்ட கப்பல் மாலையில் நாகை துறைமுகத்துக்கு திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[ஒ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.