காங்கோவில் நிலவி வரும் வன்முறையில் கிராமவாசிகள் 16 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்பிரிக்காவின் மக்களாட்சி குடியரசு நாடான காங்கோவில் உள்ள கின்ஷாசா கிராமத்தில், உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் அல்லது தீவிரவாதக் கொள்கைகளைக் கொண்டவர்கள், கடந்த 3 நாள்களாக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
காங்கோ நாடு முழுவதும் பல கிராமங்களில் அதிகாரத்தைக் கைப்பற்றவும், கனிம வளங்களைச் சுரண்டும் முயற்சியிலும் இவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள், கடந்த புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையில் நடத்திய தாக்குதலில், 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 20 பேரை கடத்தியும் சென்றுள்ளனர்.
மேலும், கடத்தப்பட்ட மற்ற 20 பேரின் நிலை குறித்து கண்டறியப்படாததால், இறப்பு எண்ணிக்கை தற்காலிகமாக உள்ளது என்று கூறப்படுகிறது.
கடத்தப்பட்டவர்களில் ஓர் அரசு அதிகாரியின் தாய் மற்றும் சகோதரியும் அடங்குவர்.
மத்திய ஆப்பிரிக்க நாடு முழுவதும் நடக்கும் வன்முறையானது, உலகின் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
காங்கோவில் உள்ள 15,000 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா., கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போராட்டத்தில் மோதலை முடிவுக்குக் கொண்டுவரத் தவறிவிட்டது. மேலும், இது தொடராமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்று காங்கோ அரசு தெரிவித்துள்ளது. [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.