காசா மீதான இஸ்ரேலின் அண்மைய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400 இற்கும் மேல் அதிகரித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இன்மையால் தாக்குதல் மேற்கொள்ள உத்தரவிட்டதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
சுமார் ஒருவருடத்திற்கும் மேலாக இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் நீடித்த நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில் இஸ்ரேல் கைதிகள் மற்றும் பலஸ்தீனிய கைதிகள் பரஸ்பரம் விடுவிக்கப்பட்டனர். முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த முதலாம் திகதியுடன் நிறைவடைந்தது.
எனினும், முதற்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் அதனடிப்படையில் இஸ்ரேல் பணய கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் இஸ்ரேல் விருப்பம் தெரிவித்து அதனை வலியுறுத்தி வருகிறது.
இது நடைபெறாத நிலையில் காசாவுக்கான நிவாரண பொருட்களை நிறுத்தியுள்ளதுடன் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.