காணிகள் விடுவிப்பு இணக்கப்பாடில்லை;
காணிகள் விடுவிப்பு இணக்கப்பாடில்லை;

ரணிலின் அறிவிப்பு காற்றில் பறக்கிறது!

(ஆதவன்)

வனவள பணிமனை மற்றும் வன உயிரிகள் பணிமனை வசம் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் அரசதலைவர் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற உயர்மட்டக் கலந்துரையாடல்களில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை. காணிகளை விடுவிப்பதற்குப் பதிலாகப் புதிதாக காணிகளை அரசிதலில் பிரசுரிப்பதிலேயே சம்பந்தப்பட்ட பணிமனைகள் அக்கறை காண்பிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரின் பின்னர் வனவள பணிமனை மற்றும் வன உயிரிகள் பணிமனை என்பன தமிழ் மக்களின் வயற்காணிகள், வீட்டுக்காணிகளை ஆக்கிரமித்து அரசிதழில் வெளியிட்டுள்ளன. இந்தக் காணிகளை விடுவிக்குமாறு தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் அரசதலைவர் ரணில் விக்கிரமசிங்க, 1985 ஆம் ஆண்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வனவள பணிமனை மற்றும் வன உயிரிகள் பணிமனை என்பனவற்றின் ஆளுகைக்குள் இருந்த நிலைமையைப் பேணிக்கொண்டு ஏனைய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் திரும்பத் திரும்ப அறிவிப்புவிடுத்து வருகின்றார்.

ஆனால், வனவள பணிமனை மற்றும் வன உயிரிகள் பணிமனை என்பன அது தொடர்பில் எதிர்மாறாகவே செயற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அரசதலைவர் செயலகத்தில் நேற்றையதினம் அரசதலைவரின் செயலர் தலைமையில் சிறப்புக் கூட்டம் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர் காதர் மஸ்தான், வவுனியா மாவட்ட ஒருங்கி ணைப்புக்குழு இணைத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் ஆகியோரும், துறைசார் அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி மற்றும் வன உயிர்கள் பணிமனையின் பணிப்பாளர் நாயகம், வடக்கின் மாவட்டச் செயலர்களும் மேலதிக மாவட்டச் செயலர்களும் பங்கேற்றனர்.

வடக்கின் 5 மாவட்டங்களிலும் விடுவிக்கக்கோரிய காணியின் அளவை வனவள பணிமனை மற்றும் வன உயிர்வில்லை என்பதை மாவட்டச் செயலர்களும் மேலதிக மாவட்டச் செயலர்களும் சுட்டிக்காட்டினர். அதைவிட புதிதாகக் காணிககளை அரசிதழ் பிரகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை கோரிக்கை விடும் காணிகளை விடுவிப்பதற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தேவை என வனவள பணிமனை மற்றும் வன உயிரிகள் பணிமனையின் பணிப்பாளர் நாயகங்கள் தெரிவித்ததுடன், அந்தக் காணிகளை விடுவிப்பதற்கான இணக்கத்தையும் வெளிப்படுத்தாமல் இழுத்தடித்தனர்.

இதனால் நேற்றைய கூட்டத்தில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. அதேவேளை, இது தொடர்பில் மீண்டும் கூடி ஆராய்வது என்று தீர்மானிக்கப்பட்டது. (ச)

#colombo_news

53 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.