காஸாவில் மனிதனால் உருவாக்கப்பட்ட கொடும் பஞ்சம் நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலை வகைப்பாடு (IPC) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அதன் அறிக்கையின்படி, காஸாவில் அரை மில்லியனுக்கும் (5 இலட்சத்துக்கும்) அதிகமான மக்கள் கடுமையான பசியை எதிர்கொள்கின்றனர். காஸா நகரம் உட்பட பாலஸ்தீனத்தின் சுமார் 20 சதவீதப் பகுதியில் பஞ்ச நிலைமை தலைவிரித்துள்ளது.
மத்திய கிழக்கு வரலாற்றில் ஒரு பகுதியில் பஞ்சம் அறிவிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். பசியைப் போர் ஆயுதமாகப் பயன்படுத்துவது ஒரு
போர்க்குற்றம் என்று ஐ.நா மனித உரிமைகள் அதிகாரி வோல்கர் ட்ரக் தெரிவித்துள்ளார்.
உடனடிப் போர்நிறுத்தம் செயற்படுத்தப்பட்டு, மனிதாபிமான உதவி கிடைக்காவிட்டால், கான்யூனிஸ் மற்றும் டெய்ர் அல்பாலா போன்ற தெற்குப் பகுதிகளுக்குப் பஞ்சம் பரவக்கூடும். பல்லாயிரக்கணக்கானோர் பட்டினியின் விளிம்பில் உள்ளனர். உதவி கிடைப்பதில் ஒரு நாள் தாமதம்கூட பட்டினி மரணங்களை அதிகரிக்கச் செய்கிறது. தடுக்கக்கூடிய இறப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன என்று அறிக்கை எச்சரிக்கிறது. காஸாவில் கடந்த ஓரிரு மாதங்களில் பட்டினியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300 ஐ நெருங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.