நவம்பர் மாதம்14ஆம் திகதி நடைபெறவுள்ளநாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னாயத்த பணிகள் கிளிநொச்சி மாவட்டத்தில் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஓர் அங்கமாக கிளிநொச்சி மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களின் வலய உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு இன்று செவ்வாய்க்கிழமை(05) நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட பதில் மாவட்ட செயலர் எஸ்.முரளிதரன் தலைமையில், மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.
இதன்போது வலய உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களிற்கான கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட பதில் உதவித் தேர்தல் ஆணையாளர் டி.சி அரவிந்தராஜ்சால் விளக்கமளிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் வலய உதவி தெரிவத்தாட்சி அலுவலகர்களாக நியமிக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.