கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இடம்பெற்றதன் பின்னராக யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய மருத்துவக் கலாநிதி ஸ்ரீ பவானந்தராஜா மற்றும் றஜீவன் ஆகியோர் கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனைக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
இந்த பயணத்தின் போது கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் நெதர்லாந்து நாட்டின் கொடை மற்றும் மென் கடன் மூலம் 5000 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மகளிருக்கான சிறப்பு சிகிச்சை நிலையத்தினை பார்வையிட்டு அதனை முழுமையாக இயங்கச்செய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் முக்கியமாக ஆராயப்பட்டது.
மருத்துவமனையின் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனாக்கத் தேவையான ஆளணி வெற்றிடங்களை நிரப்புவது மற்றும் ஆளணி எண்ணிக்கையினை அதிகரிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் வினோதன் மற்றும் கிளிநொச்சி பொது மருத்துவமனை பணிப்பாளர், பிரதிப்பணிப்பாளர் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.