கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப் பரீட்சையை நடாத்துவதற்கு கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து, விண்ணப்பத்தாரிகளுக்கு கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர்
ஜே. லியாகத் அலியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கள மற்றும் தமிழ் மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவை 3-I(அ) தரத்துக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை 03.08.2024 திகதி நடாத்தப்பட்டது.
கிழக்கு மாகாண பொதுசேவை ஆணைக்குழுவினால், நாடாத்தப்பட்ட இந்த பரீட்சைக்குத் தோற்றிய 1105 பரீட்சார்த்திகள் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த 1105 பரீட்சார்த்திகளின் பெயர்ப்பட்டியளையும் பொதுச் சேவை ஆணைக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
நேர்முகப்பரீட்சைகள் 2025 ஜனவரி 16, 17மற்றும் 18 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது எனவும், நேர்முகப்பரீட்சைக்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் பிரயோகப்பரீட்சையிலும் தோற்ற வேண்டும் எனவும்
மேற்குறிப்பிட்ட திகதிகளில், நேர்முகப்பரீட்சை சபை 1 தொடக்கம் 5 வரையுமான பரீட்சார்த்திகளுக்கு திருகோணமலை, கன்னியா வீதி, வரோதயநகரில் அமைந்துள்ள கிழக்கு மாகாண பேரவைச் செயலகத்திலும்
நேர்முகப்பரீட்சை சபை 6 தொடக்கம் 10 வரையுமான பரீட்சார்த்திகளுக்கு திருகோணமலை, கன்னியா வீதி, வரோதயநகரில் அமைந்துள்ள கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சிலும் நடைபெறவுள்ளது.
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகப்பரீட்சைக்கான அழைப்புக்கடிதங்கள் ஏற்கனவே தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்
கிழக்கு மாகாண அரச சேவைக்கான தாபன நடைமுறை ஒழுங்கு விதிக்கோவையின் அத்தியாயம் VIIம் 63ம் பந்திக்கு அமைவாக இந்த நியமனம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்ட பின்னர், எழுத்துப்பரீட்சையின் பெறுபேறுகள் அனைத்து விண்ணப்பதாரிகளுக்கும் தனிப்பட்ட முறையில் அறிவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும்
பரீட்சார்த்திகள் இந்நேர்முகப்பரீட்சைக்கு சமூகமளிப்பதனால் தங்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் என கருதப்படலாகாது எனவும் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணை குழுவின் செயலாளரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.[ஒ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.