உக்ரைன் தலைநகர் கிவ் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் நால்வர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தாக்குதலில் காயமடைந்தவர்களில் ஒன்பது வயது சிறுமியும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ரஷ்யாவினால் ஏழு ஏவுகணைகள் மற்றும் 71 ஆளில்லா விமானங்கள் ஏவப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவற்றுள் 6 ஏவுகணைகளுக்கு பதில் தாக்குதல் நடத்தியதாக உக்ரேன் இராணுவம் தெரிவித்துள்ளது.
இதனால் மூன்று மில்லியன் மக்கள் வசிக்கும் நகரத்தில் தீ பரவல் ஏற்பட்டதுடன் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.