அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியனின் திருமணம் கடந்த புதன்கிழமை திருநெல்வேலியில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமணத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் சிலர் கீர்த்தி பாண்டியனை நிறத்தை வைத்து உருவ கேலி செய்யும் வகையில் சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்டு வந்தனர்.
அசோக் செல்வன் தனது சமூகவலைதள பக்கத்தில் கீர்த்தியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உலகிலேயே மிகவும் அழகான பெண்ணுடன் நான்' என்று கருத்தினை பதிவிட்டுள்ளார்.
அசோக் செல்வனின் இந்தப் பதிவு அவரது மனைவியை உருவ கேலி செய்தவர்களுக்கு அசோக் செல்வன் கொடுத்த பதிலடியாக பார்க்கப்படுகிறது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.