2021 ஆம் ஆண்டில் 5,401 பேர் இரட்டைக் குடியுரிமையைப் பெறுவதற்கான கோரிக்கைகளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் அவுஸ்திரேலியாவில் வசிப்பதாகவும், அவர்களின் எண்ணிக்கை 1,621 எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த 885 பேரும், அமெரிக்காவைச் சேர்ந்த 795 பேரும், கனடாவைச் சேர்ந்த 371 பேர் உட்பட இத்தாலி, சுவிட்சர்லாந்து, சுவீடன், நியூசிலாந்து, பிரான்ஸ் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளில் இருந்தும் இரட்டைக் குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளனர்.
இதன்படி, குறித்த நபர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
1za1ua
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.