முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்பிலவுப் பிரதேசத்தில் இராணுவத்தின் வசமுள்ள 190 ஏக்கர் காணிகளை விடுவித்து, அந்தப்பகுதி மக்களை உடனடியாக அவர்களது பூர்வீக வாழிடங்களில் மீளக்குடியமர்த்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கேப்பாப்பிலவு மக்கள் கடந்த காலங்களில் பெரும் போராட்டங்களை நடத்தியதால், இராணுவத்தினர் கையகப்படுத்தியிருந்த சில ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன. எனினும் 190 ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்படாமலுள்ளன. அந்தக்காணிகள் விடுவிக்கப்படவேண்டும். மாவட்டத்துக்கு வருகைதரும் அமைச்சர்களைக் கேட்டால், அவர்களும் அதே பதிலையே கூறுகின்றனர். கேப்பாப்பிலவை பூர்வீகமாகக் கொண்ட60 குடும்பங்கள் இன்னும் மீள்குடியேற்றம் செய்யப்படாமல் அவலவாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எனவே மக்களை உடனடியாக அவர்களுடைய பூர்வீக வாழிடங்களில் மீள்குடியேற்றம் செய்யவேண்டும்- என்றார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.