கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட உடைகளில், தோட்டாக்கள் துளைத்த மற்றும் சந்தேகத்துக்கு இடமான அடையாளங்கள் காணப்படுகின்றன என்று முல்லைத்தீவு சட்டமருத்துவ அதிகாரி வாசுதேவாவால் நீதிமன்றத்தில் அறிக்கையிடப்பட்டுள்ளது.
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட உடைகள் தொடர்பான கூராய்வு அறிக்கை முல்லைத்தீவு நீதி மன்றத்தல் முல்லைத்தீவு சட்டமருத்துவ அதிகாரி வாசுதேவாவால் நேற்றுச் சமர்ப் பிக்கப்பட்டுள்ளது. அதிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் உடைகளில் 'கைகளால் தைத்து பொறிக்கப்பட்ட இலக்கங்கள் மற்றும் 'த.வி.பு என்று குறிப்பிடப்பட் டுள்ள பகுதிகள் தொடர்பிலும் நீதிமன்றத் தின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப் பட்டுள்ளது என்றும் தெரியவருகின்றது.
பின்னணி
கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதியன்று, முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினைப் பொருத்துவதற்காக, கனரக இயந்திரத்தின் மூலம் நிலத் தினை அகழ்ந்தபோது மனிதப் புதைகுழியொன்று இனங்காணப்பட்டிருந்தது.
இதனையடுத்து முல்லைத்தீவு நீதிமன்றம், முல்லைத்தீவு சட்டமருத்துவ அதிகாரி ஆகியோரின் கண்காணிப்பு மற்றும் பங்குபற்றுதல்களுடன், தொல்லியல் துறைப்பேராசிரியர் ராஜ்சோமதேவ தலைமையிலான குழுவினரால் அந்த மனிதப்புதைகுழியில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
திட்டமிடப்பட்ட வகையில் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் அந்தப் புதைகுழி உரிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் அடையாளப்படுத்தல்களுக்கு அமைய மூடப்பட்டது. அந்தப் புதைகுழியில் மீட்கப்பட்ட உடைகள் தொடர்பான கூராய்வு அறிக்கையே முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நேற்றுச் சமர்ப்பிக்கப்பட்டது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.