கொலஸ்ட்ரோல், உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகிய மூன்றினாலும் தற்போது அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக கொலஸ்ட்ரோல், அதிகமாவது இதய நோய்களுக்கான முக்கிய காரணியாக உள்ளது.
கொலஸ்ட்ரோலைப் பொறுத்தவரையில் நல்ல கொலஸ்ட்ரோல், கெட்ட கொலஸ்ட்ரோல் என இரு வகையுண்டு.
இதில் ஹெச்டிஎல் (HDL) கொலஸ்ட்ரோல் நல்ல கொலஸ்ட்ரோல் என்றும் எல்டிஎல் (LDL)கொலஸ்ட்ரோல் கெட்ட கொலஸ்ட்ரோல் எனவும் கூறப்படுகிறது.
இவை நாம் உண்ணும் உணவிலிருந்து உற்பத்தியாகிறது.
இதில் எல் டி எல் கொலஸ்ட்ரோல் அதிகமாக இருந்தால் அது நமது இதயத்துக்கு அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும்.
அதாவது, ஆர்ட்டரிகளில் கொஞ்சம் கொஞ்சமாக கொழுப்பை சேகரித்து இரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தும். நாட்கள் ஆக ஆக இவை உடலின் இரத்த ஓட்டத்தை பாதிக்கும்.
உங்களது உடலில் கொலஸ்ட்ரோல் அதிகமாக இருந்தால், பெரிஃபெரல் ஆர்ட்டரி (peripheral artery disease) என்ற ஒரு நோய் உருவாகும்.
PAD எனப்படும் இந்த நோயானது, இடுப்புப் பகுதிகள், தொடை, கெண்டைக் கால் தசைகளில் க்ராம்ப்ஸ் போன்ற தசைபிடிப்பு மற்றும் வலியை ஏற்படுத்தும்.
கொலஸ்ட்ரோலினால் PAD ஏற்படும் அபாயம் இருப்பவர்களுக்கு கால்களில் வலி, வீக்கம், காயங்கள் ஆறாமல் இருப்பது, முடி கொட்டுதல், நகங்கள் உடைதல், கைகளில் வலி மற்றும் தசை பிடிப்பு உள்ளிட்டவை ஏற்படும்.
எண்ணெயில் பொரித்த உணவுகள், வறுத்த உணவுகள், குளிர்பானங்கள் ஆகியவற்றை அளவோடு உண்ண வேண்டும்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள், பழங்கள், காய்கறிகள், கீரை வகைகள் ஆகியவற்றை அதிகமாக உண்ண வேண்டும்.
அத்துடன் உடற்பயிற்சி செய்வதும் மிகவும் முக்கியம். உடற்பயிற்சி செய்யும்போது நமது இரத்த ஓட்டம் சீராகி தசைகள் மற்றும் எலும்புகள் வலுவாகும்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.