வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் கோண்டாவில் ஈழத்து சபரிமலை சபரீச ஐயப்பன் தேவஸ்தானத்தின் வருடாந்த மகரயோதி மண்டலத்தின் கறுப்பண்ணசாமி பூசை வழிபாடுகள் நேற்றையதினம்(26) பக்திபூர்வமாக இடம்பெற்றது.
விநாயக வழிபாட்டு கிரியைகள் ஆரம்பமாகி, கருவறையில் வீற்றிருக்கும் ஐயப்பனுக்கு விசேட, அபிசேகம் இடம்பெற்றது. பின்னர் 18படி பூஜைகள் இடம்பெற்று வசந்த மண்டபத்தில் அருள்பாலிக்கும் ஐயப்பனுக்கும் தீபாராதனைகள் இடம்பெற்றது. 108 ஐயப்பன் தோத்திர மாந்திரங்கள் குரு சாமிமார்கள், சிவாச்சாரியரினால் ஓதப்பட்டு ஐயப்பனின், கறுப்பண்ணசாமி வீதியுலா வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நாட்டின் பல பாகங்களிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனின் ஆசியை பெற்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.