பாகிஸ்தான் சர்வதேச எயார்லைன்ஸ்க்கு சொந்தமான உள்ளாட்டு விமானம் லாகூர் விமான நிலையத்தில் லேண்டிங் கியரின் பின்புற சக்கரங்களில் ஒன்று இல்லாத நிலையில் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், பயணிகளுக்கு எந்தவித அசம்பாவிதம் ஏற்படாத வகையில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.
பாகிஸ்தான் சர்வதேச எயார்லைன்ஸ்க்கு சொந்தமான உள்நாட்டு விமானம் கராச்சியில் இருந்து லாகூருக்கு புறப்பட்டுச் சென்றது.
பயணிகளுடன் லாகூர் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதன்பின் லேண்டிங் கியரில் உள்ள 6 சச்கரங்கில் பின்புறம் இருக்கும் சக்கரங்களில் ஒன்று காணாமல் போனது தெரியவந்தது. விமானம் காராச்சியில் இருந்து புறப்படும்போது கழன்று விழுந்ததா? அல்லது லாகூர் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது கழன்று விழுந்ததா? எனத் தெரியவில்லை.
இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விமானம் கராச்சியில் இருந்து புறப்படும்போது ஒரு சக்கரம் பழுதடைந்த நிலையில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.