தருமபுர போலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாற்று பகுதியில் அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றி பயணிப்பதாக அன்று தர்மபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக (07. 09 .2024) அன்றைய தினம் காலை 6 டிப்பர்களும் அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணைகள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் தடையை பொருட்கள் நீதிமன்றில் உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் இப்பகுதியில் தொடர்ச்சியாக 10 வருடங்களுக்கும் மேலாக சட்டவிரோத மணல் அகழ்வு நடைபெறுவதாகவும் இதனை தடுத்து நிறுத்த இந்த ஒரு அதிகாரிகளாலும் இயலாத காரியமாக உள்ளதாகவும் இதன் காரணமாக இப்பகுதியில் இயற்கை வளங்கள் அழிவடைந்து வருவதாகவும் இப்பகுதியில் வாழும் சிலர் தெரிவித்துள்ளனர். (ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.