முல்லைத்தீவு, கொக்குதொடுவாய் கடற்கரைப்பகுதியில் சட்டவிரோத முறையில் சுருக்குவலை தொழிலில் ஈடுபட்டிருந்த ஐந்து மீன்பிடி படகு, இரண்டு சுருக்குவலைகளுடன் ஆறு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு, கொக்குதொடுவாய் கடற்கரை பகுதியில் சட்டவிரோத மீன்பிடித் தொழில் இடம்பெறுவதாக கடற்தொழில் திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த இடத்திற்கு சென்ற கடற்தொழில் திணைக்களத்தினர் , கடற்படையினர் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டிருந்த ஐந்து மீன்பிடி படகுகளையும், இரண்டு தடை செய்யப்பட்ட சுருக்கு வலைகளுடன் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சட்டவிரோத மீன்பிடிக்கு வெளிச்சத்தை பாய்ச்சிய படகுகள் பற்றிய விசாரணைகளை கடற்தொழில் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றதுடன் கைது செய்யப்பட்ட ஆறு நபர்களும் இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.