அமைச்சர்கள் உறுதி என ரவிகரன் எம்.பி. தெரிவிப்பு!
வடக்கில் இந்த வருட இறுதிக்குள் சட்டவிரோதக் கடற்றொழில் செயற்பாடுகள் முற்றாகக்கட்டுப்படுத்தப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோர் உறுதியளித்துள்ளனர் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில், இடம்பெற்ற கடற்றொழில் அமைச்சின் ஆலோசனைக்குழுக்கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் தெரிவித்துள்ளதாவது-
வடக்கு மாகாணக் கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி, சுமார் 18 வகையான சட்டவிரோத மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். இதனால் எமது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது. சட்டத்துக்கு ஏற்ப கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்கள்
பாதிக்கப்படுகின்றனர். முக்கியமாக வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல், சுருக்குவலை, வெடிவைத்து மீன்பிடித்தல் உள்ளிட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களால், பாரம்பரிய கரவலைத்தொழிலில் ஈடுபடுபவர்கள் பாதிக்கப்படுகின் றனர் என்று கூட்டத்தில் சுட்டிக்காட்டினேன்.
கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோர். இந்திய மீனவர்களின் அத்துமீறல், சட்டவிரோதக் கடற்றொழில் செயற்பாடுகள் தொடர்பில் கூடுதல் கரிசனை செலுத்தியுள்ளோம். எதிர்வரும் டிசெம்பர் மாதம் இறுதிக்குள் இவற்றை முற்றாகக் கட்டுப்படுத்தத் தீர்மானித்துள்ளோம். இதுதொடர்பில் கடற்படையினருடனும், பொலிஸாருடனும் கலந்துரையாடப்படும் என்று பதிலளித்தனர். என்றார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.