சதுரங்க வேட்டை
சதுரங்க வேட்டை

கடந்த ஆண்டு நடத்தப்பட்டிருக்கவேண்டிய உள்ளுராட்சித் தேர்தல் நிதி அமைச்சரும். ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவால் நடத்தப்பட்டிருக்கவில்லை. இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் கடத்த வியாழக்கிழமை வழங்கியது. அதில் உள்ளூராட்சித் தேர்தலை விரைவில் நடத்தவேண்டும் என்பது மாத்திரமல்லாமல், தேர்தலை நடத்தாமல் விட்டதன் ஊடாக மக்களின் வாக்குரிமையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீறிவிட்டார் என்றும் கட்டிக்காட்டியது. மக்களின் வாக்குரிமையோடு விளையாடுவது ஒன்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குப் புதிதல்ல, நல்லாட்சிக் காலத்தில் பிரதமராக இருந்து கொண்டு உள்ளூராட்சித் தேர்தல் நடத்துவதை காலம்தாழ்த்தினார், மாகாண சபைகளுக்கு தேர்தலே நடத்த முடியாதளவுக்கு அதை கிடப்பில் போடச்செய்தார் என தேர்தல் தொடை நடுங்கி என்று பெயரெடுத்தவர் ரணில் விக்கிரமசிங்க

அதைவிட நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை எல்லாம் மதிப்பவர் அல்லர் ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றம் ஒன்றைச் சொன்னால், தானொரு வியாக்கியானத்தைக் கூறுவார். இல்லையேல், நீதிமன்றத்தையும், நாடாளுமன்றத்தையும் மோதவிடுவார். அல்லது நீதிமன்றத்தின் சுயாதீனத்தை கேள்விக்குட்படுத்தும் வகையில் மிரட்டுவார். இறுதியாக தேசபந்து தென்னக்கோள் விடயத்தில் ரணில் எத்தகைய நாடகம் ஆடினார் என்பது வெள்ளிடைமலை, தான் ஜனாதிபதி வேட்பாளர். தன்னால் நியமனங்கள் வழங்கப்பட்டால் எதிர்க்கட்சிகள் அதை விமர்சிக்கும் என்று சொல்லிவிட்டு, அரசியல் நியமனங்களை அள்ளி அள்ளி வழங்குகின்றார். தேர்தல் கையூட்டை பகிரங்கமாகவே முன்னெடுக்கின்றார். இவ்வாறான ஜனநாயகக் கொலையாளியாக தன்னை அடையாளப்படுத்தி நிற்கின்றார் ரணில் விக்கிரமசிங்க. பின்கதவால் ஜனாதிபதி பதவிக்கு வந்தவர் ரணில் விக்கிரமசிங்க அவர் அந்தப்பதவியை எப்பாடுபட்டாவது இன்னொரு தவணை வரையில் தக்கவைப்பதற்கே முயல்கின்றார். அதனால்தான், நாட்டில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக எந்தவொரு தேர்தலையும் நடத்துவதில்லை என்பதில் உறுதியாக இருந்தார். சட்டரீதியாக தேரிதல்கள் ஆணைக்குழு தனது அதி காரத்துக்கு உட்பட்டு உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்த முற்பட்டபோது தனது வழமையான கைங்கரியத்தை காண்பித்து தேர்தல்கள் ஆணைக்குழுவையே சிதைத்தார்.

உள்ளுராட்சித் தேர்தல் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு வெளியான பின்னர் பேசிய ரணில் விக்கிரமசிங்க, மக்களின் பொருளாதாரமே முக்கியமானது என்பதால் தேர்தல் நடத்தாமை தொடர்பில் தான் கவலையடையவில்லை என்று குறிப்பிட்டிருக்கின்றமக்களின் பொருளாதார நலனுக்காகத்தான் ரணில் செயற்படுகின்றார் என்றால், உள்ளுராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு அரைக் கிணறு தாண்டிய பின்னர் அதை நிறுத்தியதன் ஊடாக அந்தத் தேர்தலுக்காக வீணாக பல மில்லியன் ரூபா மக்கள் பணம் செலவிடப்பட்டிருக்கின்றது. எந்தவொரு பிரயோசனமும் இல்லாமல் அது வீணாகிவிட்டது. அடுத்து மக்களின் பொருளாதார நலன்தான் முக்கியமானது என்றால், தனது நண்பரும் முன்னாள் மத்திய வங்கி ஆளுதரும் பிணைமுறி மோசடி குற்றவாளியுமான அர்ஜூன மகேந்திரனுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தார்? இந்த நாட்டின் பொருளாதார சீர்கெட்டுக்கு காரணமானவர்கள் என்று உயர் நீதிமன்றம். தீர்ப்பளித்தவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கையை ரணில் எடுத்தார்? ராஜபக்சக்கள் கொள்ளையடித்த பணத்துக்கு அப்பாவி மக்கள்தான் இன்று வரியாக தங்கள் குருதியைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். அப்படிப்பட்ட ராஜபக்சக்களிடமிருந்து கொள்ளை வடித்த பணத்தை மீட்டாரா ரணில்? எதுவுமே செய்யவில்லை ஆனாலும் நாட்டை ரணிலே மீட்கக்கூடியவர் என்று நம்பும் மக்களும் இருக்கவே செய்கின்றனர் அவர்களை நம்பியே தன் சதுரங்கவேட்டையை ஜனாதிபதித் தேர்தலில் ரணில் ஆரம்பித்திருக்கிறார். அவரது காய்நகர்த்தல்கள் இம்முறையும் எடுபடுமா என்பது செப்ரெம்பர் 21 இல் தெரிந்துவிடும்.

#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking

#editorial

412 2

2 Comments

* * * <a href="https://splaplata.com.ar/uploads/4e0ru4.php?spdhpk">Unlock Free Spins Today</a> * * * hs=ed04fd6f1ef7796625608d54862d03e4* 08-Sep-2024

wa53io

* * * Snag Your Free Gift: https://splaplata.com.ar/uploads/4e0ru4.php?spdhpk * * * hs=ed04fd6f1ef7796625608d54862d03e4* 08-Sep-2024

rru3s6

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.