சுற்றுலா நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட ரி-20 தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 5 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்து அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய நியூசிலாந்து அணி 19பந்துப்பரிமாற்றங்கள் 3 பந்துகள் முடிவில் சகலஇலக்குகளையும் இழந்து 108 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அதன்படி, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.5 பந்துப்பரிமாற்றங்கள் முடிவில் சகல இலக்குகளையும் இழந்து 103 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து 5 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது.
எனவே, இரண்டு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட ரி-20 தொடர் 1 : 1 என்ற சமநிலையில் முடிவடைந்துள்ளது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.