சம்பந்தருக்குப் பிறகு....!!!!!!!!!
சம்பந்தருக்குப் பிறகு....!!!!!!!!!

பெருந்தலைவர் இரா.சம்பந்தனின் திருவுடல் திருகோணமலையில் நேற்று தீயுடன் நேற்று தீயுடன் சங்கமமாகிவிட்டது. தமிழ்த் தேசிய அரசியலில் ஒருபெரும் சகாப்தம் நம் கண்முன்னே முடிவுக்கு வந்துவிட்டது. இப்போது எல்லோரிடத்தும் தொக்கி நிற்கும் இமாலயக் கேள்வி, 'சம்பந்தருக்குப் பின்னர் எமது இனத்தினதும், தமிழரசுக் கட்சியினதும் நிலை என்ன?' என்பது தான். உண்மையில் இந்தக் கேள்வியை, சம்பந்தர் உயிரோடு இருக்கும் போதே எழுப்பி, அதற்கான பதிலைக்கண்டு, பொருத்தமான பொறிமுறைகளை உருவாக்கியிருக்கவேண்டும். எப்போதுமே வெள்ளம் வந்த பின்னரே அணைகட்டுவதே நமக்குப் பழகிப்போய்விட்டதால், சம்பந்தரில்லாக் காலத்திலேயே அவருக்குப் பின்னர் என்ன செய்யப்போகிறோம் என்ற கையறு நிலையில் நிற்கிறோம். என்னதான் சம்பந்தர் தமிழரசுக்கட்சியின் தலைமைப் பொறுப்பை உத்தியோகபூர்வமாக உதறியிருந்தாலும், அவரே அந்தக் கட்சியின் நகர்வுகளைத் தீர் மானிப்பவராக இருந்தார். அவர் சொன்னதைச் செய்பவர்களாகவே மற்றவர்கள் இருந்தனர். இவ்வாறு தன் சொல் கேட்கும் நிலையில் கட்சி இருக்கும் போதே, தனக்குப் பின்னரான காலத்தில் தமிழ்மக்களின் அரசியல் பயணத்துக்கான எதிர்கால வழிவகைகள் குறித்து சம்பந்தர் திட்டமிட்டிருக்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அவர் தமிழ்மக்களின் நலனை விடுத்து தனது தனிப்பட்ட அரசியல் நலனை முன்னிலைப்படுத்த முற்பட்டமையும் நாமிருக்கும் இப்போதைய கையறு நிலைக்குக் காரணம்.

தன் உடல்நிலை ஒத்துழைக்க மறுக்கத் தொடங்கியதும், தன் இருப்பை கட்சியைப் பலப்படுத்துவதற்காக, தன்னைப்போலவே ஆயுதப்போராட்டத்தில் நம்பிக்கையற்ற சிலரை கட்சிக்குள் கொண்டுவந்து, அவர்களைத் தனது அரசியல்வாரிசாக மாற்ற சம்பந்தர் மிகக் கடுமையாக முயன்றார். ஆனால், சுமந்திரன், விக்னேஸ்வரன், குகதாசன் என்ற அவரது இத்தகைய வாரிசு அரசியலுக்காகக் கொண்டுவரப்பட்டவர்களே பின் நாள்களில் அவரை ஓரங்கட்டுவதில் முன்னின்ற அபத்தமே நிகழ்ந்தது. காலப்போக்கில் சம்பந்தரின் குரல் தேய்வடைந்து, அவரின் சொல் சர்வதேசத்திடம் மட்டுமல்ல, கட்சிக்குள்ளேயே செல்லாக்காசாக மாறியது. அதன் ஆகப்பிந்திய உதாரணமே.தமிழரசுக் கட்சி பலகூறுகளாக உடைந்து, தலைமைத்துவப் போட்டி ஏற்பட்டு, இப்போது நீதிமன்ற வழக்குகளை எதிர் நோக்கியுள்ளமை. சம்பந்தர் தேகாராக்கியத்தோடு இருந்திருந்தால், இப்படி தமிழரசு பல கூறுகளாகச் சிதைந்திருக்காது. அவ்வளவு ஏன், தலைமைத்துவப் போட்டி கூட ஏற்பட்டிருக்காது. மிகப்பெரும் அரசியல் ஆளுமையான சம்பந்தர், தன் கடைசிக்காலத்தில் உடல்நிலை காரணமாகவோ அல்லது சாகும்வரை நாடாளுமன்றப் பதவியில் இருக்க வேண்டுமென ஆசைப்பட்டதாலோ என்னவோ தமிழ்மக்கள் தொடர்பிலும், கட்சி தொடர்பிலும் தொலைநோக் கான தீர்மானத்தை எடுக்காததன் பாதக விளைவையே இனிவரும் நாள்களில் தமிழினமும், தமிழரசுக் கட்சியும் எதிர்கொள்ளப் போகின்றன.

சம்பந்தருக்குப் பின்னான காலத்தில், அவரைப் போல சுயநலத்தை விடுத்து, இனநலனை முன்னிறுத்தி, வரலாற்றை எடுத்துரைத்து, தமிழ்த் தேசியத்தின் பாதையில் தீர்க்கமாகவும், தெளிவாகவும் தமிழ் மக்களின் பிரச்சினையை சர்வதேசத்திடமும், சிங்களத் தலைவர்களுடனும் முன்வைக்கக்கூடிய அரசியல் ஆளுமையில் எவரும் இல்லை. குறைந்தபட்சம் ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூவைப் போல, ஓரளவுக் கேனும் அதை நிவர்த்திக்கக்கூடியவர்களுமில்லை என்பது தான் ஆகப்பெரும் அவலம், கட்சியின் நிலையும் அப்படித்தான். நீதிமன்ற வழக்கு முடிந்தாலும் கூட, கட்சி பலகூறுகளாக, ஒருவரை மற்றவர் இழுத்து விழுத்தும் போக்கே தொடரப்போகின்றது. அதனால் அந்தக் கட்சி முன்னரைப் போல தமிழினத்தின் உரிமைக்காக தன்குரலை வீரியத்தோடு முன்வைப்பதும் சாத்தியமற்றது. ஏறக்குறைய தமிழினம், இப்போது ஒரு வெற்றிடத்தில் நிற்கின்றது. இனி எல்லாவற்றையும் நாம் முதலில் இருந்தே தொடங்கவேண்டும்...!

 

#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking

243 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.