சரக்கு ரயில் மீது பயணிகள் விரைவு ரயில் மோதி விபத்து
சரக்கு ரயில் மீது பயணிகள் விரைவு ரயில் மோதி விபத்து

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மைசூரு தர்பங்கா பயணிகள் விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று இரவு ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்த மைசூர் தர்பங்கா பயணிகள் விரைவு ரயில் திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியதில் விபத்து நேரிட்டுள்ளது. இரவு 9.20 மணியளவில் இரு ரயில்களும் மோதியதில் ரயிலின் 3 பெட்டிகள் தரம்புரண்டதாகவும் அதனால் தீப்பற்றி எரிந்தாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

விபத்து தொடர்பில் தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் அரக்கோணத்தில் இருந்து என்.டி.ஆர்.எப் வீரர்கள் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்தில் காயமடைந்த 8 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதோடு முதற்கட்டமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 

ராட்ச கிரேன் மூலம் விபத்துக்குள்ளான பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணியில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சென்னை சென்ரலில் இருந்து வடமாநிலங்களை நோக்கி புறப்பட இருந்த ரயில்கள் ரயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

மேலும் கும்மிடிபூண்டியில் இருந்து இயக்கப்படும் புறநகர் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

70 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.